பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை329

அந்த ஓலைகண்ட நாழிகைக்கு குமராசங்கு ஒருவருமாய்த் தான்வாரார்
தத்தும்குதிரை விட்டு சங்கர் தார்வேந்தர் வருகையிலே
கோட்டைத் தலைவாசல் காக்கும் சோணகிரி வில்லியர்கள்
கோட்டை வாசல் சாத்தி திட்டி வாசல் திறந்து விட்டார்
கோட்டை வாசல் திறக்களென்று கூப்பிட்டார் நல்ல சங்கு

அந்தமொழிகேட்டு தலைவாசல்காரர் அப்போது ஏது சொல்வார்
கோட்டைவாசல் திறக்க எங்கள் ராஜா உத்தரவு இல்லை இப்போ
திட்டிவாசல் வழியாக நீர் சென்றேறிப் போகுமையா
அந்த மொழிகள் சொல்ல சங்கருக்கு அதிகோபமாகியேதான்
சோழர் ஏழு சுத்து கேட்டையை உடைத்தார் பெருவிரலால்

அப்போது கிடுகிடென்று கோட்டை அதிர்ந்து விழுந்ததப்போ
ஏறின குதிரைவிட்டு சங்கர் இறங்காமல் வாரபோது
அண்ணரைக் கண்டுமப்போ புரவியை அன்பாக விட்டிறங்கி
வாங்கோபம் சினத்துடனே வாராரே நல்லசங்கு
எதிராக வந்து (ராஜாவைப் பார்த்து) என்னசொல்வார் நல்லசங்கு

உன்சீமையிலே ஆட்டைப் பிடித்தோமா அருங்களவு செய்தோமா
மாட்டைப்பிடித்தோமா உன்சீமையிலேமகா களவு செய்தோமா
பூட்டை உடைத்தோமா? உன் சீமையில் புதுமைகளைச் செய்தோமா
தன்னாளாய் விட்டுக்கோட்டைக்கு தனியே வரவழைத்து
உபாயமாய் ஆளு விட்டு உன்னூர் வரவழைத்து
விலங்கில்லாக் காவல் வைத்ததற்கு வெட்டுவேன் நானும் உன்னை