உன் சின்னஞ்சிறு தலையை சிரசை அறுப்பேனினி உன் மணிமகுடந்தரித்த முடியை மந்திர வாளுக்கிரையிடுவேன் வெட்டுகிறேனென்று சொல்லி மெல்லியவாள் தும்புவிட அந்தமொழி சொல்லையிலே அண்ணர் முன்னே வந்துநின்று ராஜாவைப் பின்னே வைத்து பொன்னர் வந்து முன்னே நின்று தம்பியரைப் பார்த்து தார்வேந்தர் ஏதுசொல்வார் பட்டம் பொறுத்தவரை சோழர் பாருலகையாண்டவரை சிங்காதனம் பொறுத்த திருக்கொலுவு பெற்றவரை வெட்டுகிறேன் என்றுசொல்லி தம்பிசங்கு விசனங்கள்கொள்ளதே* அந்தமொழி கேட்டு தம்பிசங்கு அப்போ மனங்குளிர்ந்து அண்ணா நீர் சொன்னதற்கு மனம் பொறுத்தேன் சோழர் சொன்ன பிழையைவிட்டேன் அந்த மொழிகள் சொல்ல ராஜா அப்போ மனங்குளிர்ந்து ஆடை அலங்கரித்து பொன்னருக்கு ஆபரணம் பூட்டுகிறார் கடதாரம் முடதாரம் பொன்னருக்கு கண்டசரம் பூட்டியேதான் மாணிக்கம் பதித்ததொரு பொன்னருக்கு மார்பில் பதக்கமிட்டு அள்ளிச் செலவழிக்க ஆயிரம் பொன் தான்கொடுத்து பச்சைக்கல் பதித்த பல்லாக்கு முன்னே வைத்து தங்கமுலாம் பூசியுள்ள தண்டிகையும் முன்னே வைத்து தண்டிகைக்கு ஏற்ற தணிந்த சிவியாகும் பல்லாக்குக்கேற்ற பதிந்த சிவியாகும் இந்த வெகுமதிகள் உன்னுதென்று ராஜா உத்தரவு செய்தபின்பு *வசனங்கள் சொல்லாதே. | | |
|
|