பொன்னாண்டார் தம்பியர்க்கு ராஜா வெகுமதிகள் செய்வோமென்று வாசல் பிரதானியை வரவழைத்துக் கேட்கையிலே என்ன வெகுமதியும் ஏற்காது சங்கருக்கு மத்தகத்து வெள்ளானை மதகிரியை அலங்கரித்து அந்த மத வெள்ளானையை சங்கருக்கு வெகுமதிகள் செய்ய வேணும் அந்த மொழிகள் சொல்ல பாகனை அழைத்தாரே ராஜாவும் யானையுட பாகனைத்தான் அழைத்துமே ஏது சொல்வார் மத்தகத்து வெள்ளானை மதகரியை அலங்கரித்து யானை அலங்கரித்துக் கொண்டுவர ஆக்கினைகள் செய்தபின்பு யானை அவிழ்த்து வந்து அலங்கரித்தார் அந்நேரம் பக்கத்துக்கு மூன்றானை பந்தம் புனைத்துக் கொண்டு கொண்டுவந்து அந்நேரம் குமாரசங்கு முன்னே விட்டார் பந்தம் புனைந்ததெல்லாம் அதைப் பாங்காய் அவிழ்த்து விட்டு இந்த நல்ல வெள்ளையானையை சங்கரே உந்தனுக்கு தந்தேனிப்போ அந்த மொழிகள் சொல்ல பொன்னர் தண்டிகை மேலேறினாரே வந்தார் குமாரசங்கு வெள்ளானை மேற்கொள்ளவேதான் யானை பணிகள் செய்து அடைவாகப்பதுங்கிடுதே மத்தகத்து வெள்ளானை சங்கர் மதகரிமேல் ஏறிக்கொண்டார் அப்போது வாள்வீரர் குமாரசங்கு ஆனைமேல் ஏறியேதான் அதட்டுகிறபோது அப்பேர்ப்பட்ட வெள்ளானை அதிர்ந்து கிடுகிடுவென கோவென்று சத்தமிட்டே வால் முறுக்கி லத்தியிட்டு வெள்ளானை வீறிட்டு வாரபோது அண்ணரைப் பார்த்துசங்கர் அப்போது சொல்லுகிறார் சிவசோழர் யானையைத்தானே வெகு பெரிதாய்ச் சொல்லிக் கொண்டார் | | |
|
|