இந்த வெள்ளானையைப் பார்த்தால் நம் எருமைக்கன்று போலவேதான் நம்மைச்சுமக்க மாட்டாமல் வீறிட்டுக் கத்திடுதே நீர் தண்டிகையை முன் நடத்தும் அண்ணாவென்று தானும்சொல்லி வெள்ளானை மேலேறி சங்கர் விருது பரிவீச பதினெட்டு வகை மேளம் வாத்தியங்கள் தான்முழங்க உறையூருப்பட்டணத்தில் பவனி வருகையிலே பட்டணத்து வீதியிலே மகா பெரிய கல்தூணு கல்தூணைக்கண்டாரே கனகமுடி வேந்தனுமே அந்தக்கல் தூணும் ஆறுபாக அகலம் அறுபதுபாக நீளமது பட்டணத்து வீதியிலே பவனி வருகையிலே அண்ணரைத்தான் பார்த்து சங்கர் அப்போது ஏதுசொல்வார் இந்த நல்ல கல்தூணை நான் எடுத்து நிறுத்துகிறேன் நீர் நகத்தாலே குழிகிள்ளும் நிறுத்துகிறேன் என்று சொல்லி தம்பியரைத்தான் பார்த்துபொன்னர்தானுமவர் ஏதுசொல்வார் குழியுமது கிள்ளிவிட்டேன் எடுத்து நிறுத்துமென்றார் மத்தகத்து வெள்ளானை மதகரியை விட்டிறங்கி பலத்தால் அசைத்தெடுத்து பெருவிரலால் தாங்கிவைத்து நகத்தாலே கூரு* கொண்டு நிறுத்தினார் கல்தூணை அண்ணரைப்பார்த்து குமாரசங்கு அப்போது ஏதுசொல்வார் நிறுத்தின கல்தூணை வெட்டி என்மந்திரவாள் நுண்மையறிய வேணும் கல்தூணை வெட்டியிப்போ என்மந்திரவாள் கடுமையறிய வேணும் அந்தமொழிகள் சொல்ல பொன்னர் அப்போது ஏதுசொல்வார் *கூறு | | |
|
|