மண்ணாண்டார் மன்னர் முன்னே மதலை சிறுசோழர் முன்னே கண்ணெதிரே கண்காண நீர் கல்தூணை வெட்டாவிட்டால் பொன்னாண்டார் தம்பி கல்தூணை வெட்டி பிழைபோனார் என்று சொல்வார் அந்த மொழி கேட்டு சங்கர் அப்போது ஏதுசொல்வார் கண்ணெதிரே கண்காண சோழர் முன்னே கல்லூணை வெட்டுகிறேன் என்று வீசினார் கல்தூணை விழுகுது பார் முன்பாக இப்பெரிய கல்லூணை எட்டுத்துண்டாய் நான்தரிப்பேன் மெல்லியவாள் தும்பிவிட்டு வீசினார் கல்தூணை வீசின கல்தூணும் அது விழுந்துதே முன்பாக இருபறமும் தான் சுழட்டி அதை எடுத்துண்டாய்தான் தரித்தார் எடுத்துண்டாய் வீசியேதான் சங்கர ஏதுசொல்வார் அந்நேரம் சோழர் திருக்கடம்பர் சன்னதிக்கு இரண்டுதிரு நிலைக்கல்தானாச்சு சோழர் பலகணிவாசலுக்கு இரண்டுபாவு பலகை ஆச்சு சோழர் ஆயிரங்கால் மண்டபத்துக்கு இரண்டு உத்திரமுமாகுமினி அந்தமொழிகள் சொல்ல அப்போது ஏதுசொல்வார் இப்பெரிய கல்தூணும் சங்கருக்கு இலவம் பஞ்சுதானாச்சு அந்தமொழி சொல்லி ராஜா அப்போ ஏதுசொல்வார் என்சீமை மேற்கே மதுக்கரைதான் கிழக்கேயும் தஞ்சாவூர் வடக்கே தான் காவேரி தெற்கே மதுரை எல்லை நாற் சமுக்கம் என் சீமை நல்லபொன்னு உன்காவல் என்சீமை உன்காவல் துரைத்தனமும் உன்காவல் சீமைக்காவல் உன்னுதென்று சிவசோழர் கையொப்பம் போட்டாரப்போ | | |
|
|