பக்கம் எண் :

40அண்ணன்மார் சுவாமி கதை

உண்மை சம்பவம்
 

தண்டவாளத்தின்
நடுவே. . . .

‘குமுதம் வார இதழ்’
 

  1971-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி, இரவு நேரம் சுமார் எட்டு
மணி.

  இடம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் ஸ்டேஷனுக்கு அருகேயுள்ள ஏரிப்
பாலம். இரும்புப்பாதை போட்ட ரயில்வே பாலம். நல்ல கும்மிருட்டு.

  திடீரென்று அந்தப் பாலத்திலிருந்து, “ஐயோ ஐயோ, கால் போச்சே” என்ற
கூக்குரல் எழுந்தது.

  பாலத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறது சுமார் இருபது முப்பது குடிசைகள்
கொண்ட சின்ன சமுத்திரம். பாலத்திலிருந்து அந்த இரவு நேரத்தில் யாரோ கத்துவது
காதில் விழுந்தது.

  பாலத்தை நோக்கி மூன்று இளைஞர்கள் ஓடினார்கள்.

  “யாரது? என்ன சப்தம் அங்கே?” என்று கேட்டார்கள்.

  “நடராஜண்ணே; நான்தான் ராஜு ! தண்டவாளக் கட்டைக்கு இடுக்கிலே என் கால்
மாட்டிகிடிச்சி; கொஞ்சம் வந்து எடுத்து விடண்ணே!”

  சின்ன சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. திருச்சியிலிருந்து வைரக் கற்களை
வாங்கி வந்து மெருகு