கொடுத்துப் பாலீஷ் செய்யும் கைவேலை செய்பவர்: வயது இருபத்தைந்து. திருச்சியிலிருந்து மரவனூருக்கு பஸ்ஸில் வந்து (மொத்த தூரம் பதினெட்டு மைல்) அங்கிருந்து கால் நடையாக ஒன்றரை மைல் தொலைவிலுள்ள சின்ன சமுத்திரத்திற்கு வந்து கொண்டிருந்தார் அவர். ரயில்வே பாலத்தைத் தாண்டி மறு பக்கம் போனால் கிராமத்தை அடைந்து விடலாம். அப்போதுதான் அவருடைய செருப்பு ஒன்று வழுக்கி விட்டது. விளைவு? பாலத்தில் உள்ள இரும்புத் தகட்டிற்கும் ஸ்லீப்பர் கட்டைக்கும் இடையே அவரது இடது கால் மாட்டிக் கொண்டுவிட்டது. கிட்டத்தட்ட முழங்கால் வரை பாலத்திற்கு கீழே போய்விட்டது. நின்ற நிலையில் தவித்தார் அவர். நடராஜன், மார்க்கண்டன், ராமு ஆகிய மூவரும் ராஜு வைத் தூக்க முயற்சித்தார்கள். எவ்வளவோ இழுத்துப் பார்த்தும் முடியவில்லை. அப்போது- வானத்தில் பளிச்சென்ற வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. “ஐயையோ! மெயில் வந்துடிச்சே சாமி” அலறினார் ராஜு . “பயப்படாதே! நாங்க அதுக்குள்ள உன்னைத் தூக்கிடறோம்.” அவசர அவசரமாய், ராஜு வைத் தூக்கும் முயற்சி. மீண்டும் தோல்விதான். இரண்டு நிமிடத்துக்குள் ஏதாவது செய்தாக வேண்டும். நினைத்தாலே எப்படிப்பட்ட மேதாவிக்கும் மூளை | | |
|
|