பக்கம் எண் :

42அண்ணன்மார் சுவாமி கதை

மரத்துப்போகக் கூடிய கூட்டம். ஆனால் ராஜு வின் நண்பர்கள் மூவருக்கும்
அறிவு சுறுசுறுவென்று வேலை செய்தது.

  தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் பாதை வளைவாக
இருப்பதால் பாலத்தில் சிக்கிக்கொண்டிருப்பதைக் கண்டு கொள்ள முடியாது. கண்டாலும்
உடனே வண்டியை நிறுத்த முடியாது.

  நடராஜன் கூவினார்:

  “தம்பி, மெயில் வந்துட்டுது, இனிமேல் நீ உயிர் பிழைக்க ஒரே வழிதான் உண்டு.
தண்டவாளத்து நடுவே அப்படியே படுத்துக்க.”

  “ஐயையோ! என்னண்ணே!”

  “படுத்துக்கண்ணா படுத்துக்க. நாங்க பார்த்துக்கிறோம். உனக்கு ஆபத்தே வராது”
என்றார் நடராஜன்.

  ராஜு வின் இடது கால் கைகளையும் தலையையும் இரும்புத் தகட்டின் உள்ளே
தூக்கி வைத்தனர். ராஜு மல்லாந்து படுத்தார். அந்த இளைஞர்கள் அவரைப் படுக்க
வைத்துவிட்டு பாலத்தை விட்டு ஓடுவதற்கும் வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது.

  அப்போது நேரம் இரவு எட்டரை மணி. சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த
தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வண்டி அது.

  வண்டியைப் பாலத்துக்கு முன்பே நிறுத்திவிடவும் அந்த இளைஞர்கள்
முயன்றார்கள். ஒருவர் தனது இடையில் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்து
வெளிச்சத்தில் காட்டினார். அதற்குள் எஞ்சின் வேகமாகப் போய்விடவே