கைகளில் வைத்திருந்த தடிகளால் பெட்டிகளிலும் தரைகளிலும் ஆவேசம் வந்தது போல அடித்தனர். அந்த இடத்தில் ஏதோ கோளாறு என்று டிரைவர் ஊகிப்பதற்குள் எஞ்சினும் ஐந்து பெட்டிகளும் பாலத்தைத் தாண்டிப் போய்விட்டன! இதற்குள் விஷயம் கிராமத்திற்குப் பரவிப் போய் விட்டது. ஊரே திரண்டு நின்றது அங்கே. டிரைவர் குழம்பிப் போனார். பாலத்தில் மாட்டிக் கொண்டவரின் கதி என்ன? அது தெரியாமல் வண்டியை எடுப்பது சரியல்ல. “நீங்களெல்லாம் கொஞ்சம் விலகுங்க. வண்டியை ரிவர்ஸ் எடுத்துப் பார்க்கலாம்” என்றார், பரபரப்புடன். கிராமத்து மக்கள் குய்யோ முறையோ என்று கூச்சலிட்டார்கள். வண்டி பின்னால் சென்றது. அடுத்து ஐந்தாவது வினாடி. . . “அந்த ஆள் பிழைச்சிருக்கிறார்!” என்றார் டிரைவர் மகிழ்ச்சியுடன். ஆம்! ராஜு எப்படி படுத்திருந்தாரோ அப்படியே இருக்கிறார். உடம்பில் எங்கும் அடியோ கீறலோ கூடக் கிடையாது. ஆனால் அவருக்குப் பேச்சு மூச்சு இல்லை. எஞ்சினிலிருந்த ஒரு இரும்புத் தடியை எடுத்தார் டிரைவர். இரும்புத் தகட்டிற்கிடையே ராஜு வின் கால்களுக்குக் கீழே ஓங்கி ஒரு தட்டுத் தட்டினார். இடைவெளி சற்று அதிகரித்தது. காலை வெளியே எடுக்க முடிந்தது. | | |
|
|