ராஜு வை அப்படியே அலாக்காகத் தூக்கிப் பெட்டியில் ஏற்றினார்கள். ராஜு வின் மனைவி, உறவினர்கள், கிராமத்து ஜனங்கள் அனைவரும் பெட்டியில் ஏறிக்கொண்டார்கள். ரயில் பாதையின் இடையே படுத்தும் மயிரிழையில் உயிர் பிழைத்த ராஜு வைத் திருச்சி ஜங்ஷனில் ஒரு ஸ்டிரெச்சரில் வைத்துப் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார் டிரைவர். மயக்கமாகப் படுத்திருந்த ராஜு வுக்கு ஊசி போட்டார்கள் ஆஸ்பத்திரியில். அடுத்த நாள் மாலை மூன்றரை மணிக்குத்தான் முழு நினைவு வந்தது ராஜு வுக்கு. பாலத்திற்கு இடுக்கில் மாட்டிக் கொண்ட காலின் பின்புறமும் இடது கையிலும் லேசான சிராய்ப்புதான். மற்றபடி ரயிலால் எந்த சேதமும் அவருக்கு ஏற்படவில்லை! மறு நாளே அவரை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்! எப்படி அதிசயம் நிகழ்ந்தது? ராஜு வைப் போல ஒடிசலான உடல் வாகு இல்லாமல் சற்றுப் பருமனான நபர் அன்று பாலத்தில் மாட்டிக் கொண்டிருந்தால் பிழைப்பது கடினம். தண்டவாளத்தின் உயரத்தைவிட குறைவாக ராஜு வின் உடல் இருந்தது. அவர் தப்பித்ததற்கு மிகவும் ஏதுவாக இருந்தது. “ரயில் கிட்டே வரும்போது எப்படி தைரியமாக இருந்தீர்கள்?” என்று கேட்டதற்கு ராஜு சொன்னார். “நான் வீரப்பூர் பெரிய காண்டியம்மன் பக்தன். ரயில் கிட்டே வர வர என் உயிரே போய்விட்டது போல் பிரமையாக இருந்தது. பெரிய காண்டியம்மா காப்பாத்து’ன்னு சொல்லி விட்டுப் படுத்துக்கிட்டிருந்தேன். அப்புறம் என்ன நடந்ததென்றுஎனக்கே தெரியாது. | | |
|
|