பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை479

வயது பதினாறாகி மாண்டார்கள் கானகத்தில்
பொன்னர் சங்கருடன் பிறந்த பொற்கொடியாள் நல்லதங்கம்
பட்டபடுகளத்தை பார்த்தெழுப்ப வேணுமென்று
ஓமம் வளர்த்திட்ட உற்ற புகை என்று சொன்னார்
அந்தச் சேதி கேட்டு ஆதி சிவன் மாயவரும்
 
படுகளம் பார்க்க மாயவர் வருதல்
 
ஓமப்புகை வழியாய் மாயன் இறங்கியே வாராரே
நரைத்த கிழவரைப் போல் சுவாமி நாமமிட்ட தாதனைப்போல்
பஞ்சாங்க வேதியன்போல் சுவாமி பார்ப்பனரைப் போலேவாரார்
திண்டுதனையூன்றி சீரான புத்தகத்தைக் கைப்பிடித்து
பஞ்சாங்கம் கொண்டு பார்ப்பாரும் தானும் வந்து

உத்தமியைத்தான் பார்த்து ஏது சொல்வார் புரோகிதனார்
ஓமமும் சாஸ்திரமும் உனக்கேது உத்தமியே
வேதமும் சாஸ்திரமும் வேதியற்கு அல்லாமல்
உனக்கு ஓமப்புகை ஏது உத்தமியே நல்லதங்கம்
வந்த பிராமணனார் வகையாகக் கேட்கையிலே

கண்டுமனங் கலங்கி காரிகையாள் எழுந்திருந்தாள்
சித்தமிரங்கியே வந்த பிராமணனார் திருவாக்கு ஏது சொல்வார்
ஓமம் நடத்துமினி ஓம சாஸ்திரங்கள் செய்யுமம்மா
ஓமத்துகுண்டானது வேதியர்க்கு உள்ள விலை முன்னே வையும்
வேதங்கள் சொல்லி வேத சாஸ்திரங்கள் செய்தபின்பு

வேதத்துக்குண்டானது வேதியர்க்கு முன்னே வையும்
அந்த மொழி கேட்க உத்தமி அப்போ மனங்குளிர்ந்து
ஓமம் வளர்த்துகிறாள் உத்தமியாள் நல்ல தங்கம்
வேதங்கள் சொல்லி வேதசாஸ்திரமும் செய்த பின்பு