வேதத்துக்குண்டான வேதியர்க்கு விலையும் கொடுத்தாளப்போ ஓமத்துக்குண்டான வேதியர்க்கு உள்ள விலை முன்னே வைத்தாள் வாள்வீரர் படுகளத்தில் இன்னும் மாணிக்கம் பிச்சையுண்டு தார்வேந்தர் படுகளத்தில் எனக்கு தங்கமும் பிச்சையுண்டு வந்த பிராமணனார் அப்போ வழக்காடி நிற்கையிலே பூண்ட பனுதியிலே உத்தமி புதுப்பனுதி பார்த்தெடுத்து வாள்வீரர் படுகளத்தில் தங்கை மாணிக்கம் பிச்சையிட்டாள் தார்வேந்தர் படுகளத்தில் உத்தமி தங்கமும் பிச்சையிட்டாள் சித்தம் திரும்பியேதான் அய்யர் திருவாக்கு ஏது சொல்வார் பொன்னிட்ட கையினாலே உங்களண்ணர் புண்ணியனார் எழுந்திருப்பார் தங்கமிட்ட கையினாலே உங்களண்ணர் சங்கரனார் எழுந்திருப்பார் அந்த நல்லவார்த்தை சொல்லி வந்த பிராமணனார் வந்த பிராமணனார் அவர் மாயமாய் ஏகி விட்டார் உத்தமியாள் தானும் இந்தக் காரணத்தை ஊடுருவித்தான் பார்த்து வந்த பிராமணனார் அவர் மாயமாய்ப் போனதென்ன? பரமசிவனாரோ சுவாமி பாருலகை அளந்தவரோ? யாரென்று எண்ணியே உத்தமி அளவறுத்துப் பார்க்கையிலே உலகளந்தார் வந்து நம்ம இந்தக் காரணத்தைச் செய்தாரென்று மாயன் பெருமாள் நம்மை மனது சோதிக்க வந்தாரிப்போ மனது சோதித்த பின்பு மாயன் வாக்குமனுச் செய்வாரினி வாக்குப்படியேதான் சுவாமி மனுவு நடக்குமினி தன்னுடைய கோத்திரத்துக்குள்ளே சாஸ்திரமெல்லாம் முடிந்து பானக்கம் ஒரு கரகம் அது பசியாற வேணுமென்று | | |
|
|