ஏலம் பொடி செய்து அண்ணருக்கு இளநீருகண் திறந்து தாகத்துக்கொரு கரகம் அண்ணருக்கு மஞ்சள்சுனை நீரு முன்னே வைத்து அண்ணரைப் பார்த்து உத்தமி அப்போது ஏது சொல்வாள் ஓமம் வளர்த்தேநான் ஓம சாஸ்திரங்கள் செய்தேன் அண்ணா நம் கோத்திரத்துக்குண்டான சாஸ்திர மெல்லாம் முடித்தேன் பானக்கமும் தண்ணீரும் உனக்கு அண்ணா பசியாற முன்னேவைத்தேன் என் ஆபத்துக்கு எழுந்திருந்து சின்னண்ணா அள்ளி விடாய் தீருமண்ணா தென்னிலங்கை ராவணனை ராமர்சாமி செய்தது பாரதங்கள் பண்டுபட்ட பாரதங்கள் ஆதி நாளையிலே பாரதங்கள்கேட்கிலையே வாலியும் சுக்ரீவனும் அவனுடைய வானரங்கள் அத்தனையும் மாண்டகளம் வந்து நின்று வாலியை மாயவனும் வந்தெழுப்பி மலையின் வகைமூலிகையை வாலனுக்கு மருந்துவகை தானுஞ் சொல்லி நிமிஷத்தில் கொண்டாவென்று நீலமேகன் தானுஞ் சொல்ல மருந்தை மறந்துமவன் வாலான் மருந்து வகை தெரியாமல் வாலால் திறைவளைத்து மருந்து மலையைப் பிடுங்கி வந்து மலையைப் பிடுங்கி வந்து கார்த்துவாகு* பார்த்து வைக்கலையா? (மருந்து) மரங்களுடன் மரம் உரசி அந்த வாடை தணல் வீசி வாடை தணல்வீசி வானரங்கள் மாண்ட உயிர் மீட்கலையா மாயனுட காரணம் தான் அண்ணா மனுவு நடக்குமிப்போ பத்திலொரு பங்கு சுவாமி வாக்கு பழுதொரு நாள் போகாது *காற்று வாகு | | |
|
|