பக்கம் எண் :

482அண்ணன்மார் சுவாமி கதை

வாக்குப்படியே தான் மாயன் வரவரழைப்பார் உன் உயிரை
வானுலகம் போன உயிர் அண்ணா மார்மூண்டு நீ திரும்பி
சிவலோகம் போன உயிர் அண்ணா திரும்பி நீ வாருமண்ணா
அந்த மொழிகள் சொல்லி உத்தமி ஆடை விரித்தெடுத்து
உடுத்தினாள் நற்றுயிலை யிட்டாளே முக்காடு

இட்டதொரு முக்காடு தன்னுடைய திரேகம் தெரியாமல்
போட்டதொரு முக்காடு தன்னுடைய புறவடிவு தெரியாமல்
சந்திரனார் தெரியாமல் உத்தமி தலைநிறைய முக்காடு
சூரியனார் தெரியாமல் உத்தமி துகிலால் திறைவளைத்து
எடுத்தாள் கரகத்தை உத்தமி கையில் ஏந்தினாள் வேப்பங்குழை

ஏந்தியதிருக்கரகம் உத்தமி ஓங்கியது பூங்குழையும்
கரகம்தனை ஏந்தி உத்தமி காரிழையாள் நல்ல தங்கம்
பட்டபடுகளத்தை அண்ணருட பாரக் குளகளத்தை
சென்ன குளகளத்தை உத்தமி சுற்றி வந்து மூன்று தரம்
சிவனை நினைத்து உத்தமி ஸ்ரீராமரைத் தானினைத்து

எழுதும் பிரமனைத்தான் உத்தமி ஈஸ்வரரைத் தானினைந்து
பேர்கொடுத்த பொன்னம்பல சுவாமி பொசிவாசி ஐயரையும்
சன்சாயி ஐயரைத் தவங்கொடுத்த புண்ணியரைத் தானினைந்து
எடுத்தாள் கரகத்தை உத்தமி ஏந்தினாள் தீர்த்தத்தை
தீர்த்தத்தைவாரியேதான் நாலு திசை பார்த்து விட்டெறிந்தாள்
 
படுகளம் எழுப்ப தங்கை ஓமதீர்த்தம் வீசுதல்
 
வாரியே தீர்த்தத்தை குமாரசங்கு வாள்வீரர் மேல் எறிந்தாள்
சித்த மிரங்கியே தான் பரமசிவனாரும் காட்சி தந்தார்
மாயனுட காரணத்தால் சங்கர் உயிர் மார்மூண்டு தான் வருதே
சிவலோகம் போன உயிர் சங்கருக்கு திரும்பியங்கே வந்திட்டுதே