பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை483

கைலாசம்போன உயிர் குமாரசங்கருக்கு கூடுவந்து சேர்ந்திட்டுதே
அங்கம் பதைக்குதப்போ குமாரசங்கர்மேனி அனல்காற்று வீசுதப்போ
ககள் விழிதிறந்து மெல்லக் காலுதைஞ்சு கொள்ளுதது
துங்கமதயானையைப் போல் குமாரசங்கு தூசிபரிமூண்டு

ஆக்கரித்து சத்தமிட்டு குமாரசங்கு அறுபதடி பின்குதித்து
கதித்த மதயானையைப்போல் குமாரசங்கு காலூன்றி எழுந்திருந்தார்
வட்டமிட்டு பவனி கொண்டு தன்னுடைய மந்திரவாள் தும்புவிட்டு
மெல்லியவாள் தும்புவிட்டு உத்தமியைப் பார்த்து வீரியவாள் ஏது சொல்வார்
அண்ணன்மார் தேவிகளை நீ அழைத்துமே வாராாமல்
வாள்வீரர் தேவிகளை நீ வைத்துவரக் காரியமேன்

போர் மன்னர் தேவிகளை நீ பிரிந்து விட்டு வந்ததுமேன்
வைத்து நீ வந்ததற்கு உன்னை வாளுக்கிரையிடுவேன்
விட்டு வைத்து வந்ததற்கு வெட்டிடுவேன் உன்னையுந்தான்
மெல்லியவாள்தும்புவிட்டு குமாரசங்கு வெட்டுகிறேன் என்றுசொல்ல
அப்போ மனங்கலங்கி உத்தமி அண்ணர் முகம் தான் பார்த்து

ஒக்கப்பிறக்கலையா அண்ணா ஒரு முலைப்பாலுண்கலையா
கூடப்பிறக்கலையா அண்ணா உன்னோட கூட்டுப்பாலுண்கலையா
கூடப்பிறக்க அண்ணா ஒரு கோடி காலம் செல்லுமினி
ஒக்கப்பிறக்க அண்ணா ஒரு கோடி காலம் செல்லும்
பெண்பாவம் பொல்லாது அண்ணா புண்ணியனே வெட்டாதே
அஞ்சி ஒடுங்கி உத்தமி அது வார்த்தை சொல்லையிலே