பக்கம் எண் :

484அண்ணன்மார் சுவாமி கதை

பொன்னம்பலசுவாமி தம்பி
படுகளத்தைக் காண வருதல்
 

வெட்டிக் கெலித்தேதான் பொன்னம்பலசுவாமி வேடுபடைசங்கரித்து
பதினெட்டு நாட்டையெல்லாம் தம்பிபலிக்கும் கருவறுத்து
குடைமேல்குடையழகர் பொன்னம்பலசுவாமி கொப்பழகுநல்ல பொன்னு
குதிரைமேல் இருந்தவர் தான் பொன்னர் குதித்திறங்கி ஓடிவந்து
தங்கையைப் பின்னே விட்டு பொன்னர்தானெதிரே முன்னேவந்து

தட்டிச்சிலம்பமிட்டார் பொன்னர் தார்வேந்தர் தம்பியர்க்கு
கூடிச்சிலம்பமிட்டார் குமாரசங்கு அண்ணருடன்
கட்டிப்பிடித்துமப்போ தம்பியரைக் கண்ணோடே சேர்த்தணைத்து
கட்டிப்பிடித்து தம்பியரைத்தானமரும் என்று சொல்லி
தங்கையரைத்தான் பார்த்து பொன்னர் தானுமப்போ ஏதுசொல்வார்

வாள்வீரர் தேவிகளை அம்மா நீ வைத்து வரலாமா
போர் மன்னர் தேவிகளை அம்மா நீ பிரிந்து விட்டுவந்ததென்ன
அந்த மொழி கேட்டு உத்தமி அப்போது ஏது சொல்வாள்
வாரும் வாருமென்று உங்கள்தேவிகளை வருந்திஅழைத்தேனண்ணா
வரமாட்டேன் என்றுசொல்லி என்னுடன் வஞ்சனைகள்செய்தார்கள்

அக்கினிக்கு பூஜை செய்து உங்கள் தேவிகளை அனுப்பி வைத்து வந்தேனண்ணா
கானலுக்கு பூஜை செய்து உங்கள் தேவிகளைக் கடத்தி வழி வந்தேனண்ணா