நீர்க்கடனும் தீக்கடனும் உங்கள் தேவியர்க்கு நீர்ணயமும் தீர்த்துவந்தேன் மைந்தனில்லாத சொத்து அவர்கள் மனையிடத்தே சேர்த்துவந்தேன் பிள்ளையில்லாத சொத்து அவர்கள் பிறந்திடத்தே சேர்த்துவந்தேன் பூஜை புனக்காரம் அவர்கள் பிறந்திடத்தே சொல்லி வந்தேன் வைத்துவந்தேனென்று சொல்லி அண்ணா மனதிலே எண்ணாதே விட்டு வந்தேனென்று சொல்லி அண்ணா விசனங்கள் எண்ண வேண்டாம் அந்தமொழி சொல்ல தங்கையைப்பார்த்து அப்போது ஏதுசொல்வார் உற்ற துணையில்லாமல் தங்கையரே ஒருத்தி வழி வரலாமா? மனிதர் துணையில்லாமல் உத்தமி வனத்தில் வரலாமா? என்று சொல்லி அண்ணர் இயல்புடனே தான் கேட்க பொன்னருடன் பிறந்த பேடைமயில் தங்கையரும் பெரியக்காண்டி துணை கொண்டு பெரியண்ணா நானும் வந்தேன் ஏழுபேர் கன்னியர்கள் எனக்குத் துணை வந்தார்கள் கானகத்தில் வந்து அண்ணர் படுகளைத்தைக் கண்டேனண்ணா நம்ம கோத்திரத்துக்குண்டான சாஸ்திரமெல்லாம் முடித்து யாகம் நிறைவேற்றி அண்ணர் உயிரை வரவழைத்து மாயனுட காரணந்தான் அண்ணா மாண்ட உயிர் மீண்டழைத்து உலகளந்தார் காரணந்தான் எழுப்பினேன் அண்ணரைத்தான் அந்த மொழிகள் சொல்ல பொன்னர் அப்போ மனங்குளிர்ந்து | | |
|
|