இதோ வாரார் என்று சொல்லி தம்பி எனக்கு இடம்பார்த்து வைத்திரடா அந்தமொழிகள் சொல்லி பொன்னர் அணுகியே கிட்டவந்து நெற்றியிலே பட்ட அம்பு சங்கருக்கு நேராகப் பாய்ந்ததைத்தான் கட்டியிலை பிடித்து உத்தமியாள் காயம் பொருந்தினதை பொன்னூசி பொன்சரடு கொண்டு உத்தமியாள் பொருந்தின காயமதை பத்தியிலை பறித்தார் பாரமுடி நல்ல பொன்னர் பண்டு பட்ட படுகளம் தான் மருக பாடாகச் சாய்ந்து விட்டார் கதித்தமத யானையைப்போல் சங்கர் கண்ணுறக்கமாகி விட்டார் அண்ணா முகம் பார்த்து உத்தமி அழுது முறைகள் செய்து ஏங்கி அழுது அண்ணரைப் பார்த்து என்ன சொல்வாள் நல்லதங்கம் அண்ணா நான் பட்டகதை சொல்வ மென்றால் எனக்கு பகலும் இரவாகும் அண்ணா நான் பட்டும் பலனில்லாமல் சின்னண்ணரை படுகளம் செய்துவிட்டாய் முன்னாள் வனத்தில் அண்ணா முப்பலிகள் தானுமுண்டோ தாயாதி பலிபோல சின்னண்ணரை சதிகேடு செய்து விட்டாய் அந்தமொழிகள் சொல்லி உத்தமி அடித்தடித்து தான் விழுந்து மாணிக்கம் பூண்ட மேனி அண்ணர் படுகளத்தில் மண்ணில் புரண்டழுது பொன்னுத்திருமேனி யேல்லாம் உத்தமி புழுதி புரண்டழுது கோந்தை குலைத்து விட்டு உத்தமி கொடியாள் புலம்புகையில் | | |
|
|