தங்கையரைத்தான் பார்த்து பொன்னர்தானுமப்போது ஏதுசொல்வார் முன்னும் பழிகாரன் உங்கள் சின்னண்ணருக்கு முதல் நாளும் தாயாதிதான் தாயாதி தன் பலிதான் உங்கள் சின்னண்ணரைத்தான் முடித்துக் கொண்டேன் உங்கள் பெரியண்ணருட ஆக்கிரமத்தை உத்தமியே பாருமம்மா அந்த மொழிகள் சொல்லிபொன்னம்பல சுவாமி ஆயுதமெல்லாம் எடுத்து |
பொன்னர் மடிய வாள் மேல் விழப்போதல் |
பதினெட்டு ஆயுதமும் வாங்கிப் பொன்னர் பார்க்கின்ற வேளையிலே பதினெட்டு ஆயுதம் பொன்னருக்கு பழுது பட்டுப் போயிருக்க பழுது பட்டவர்கள்மேல் விழுந்தால் நமக்கு பரமகதியில்லையென்று தம்பி சங்கர் சீராவைப்பொன்னர் தானெடுத்துப் பார்க்கையிலே பழுதொன்றும் இல்லாமல் ஆயுதம் பளீரென்று சோதி மின்னும் பழுதில்லாவாள் விழுந்து இறந்தால் பரமகதி தானுமுண்டு தம்பியுட சீராவை பொன்னர் தானும் நிறுத்துகிறார் அலகு நிறுத்தி வைத்து பொன்னர் அதன் மேலே தான் குதிக்க வாள்மேல் குதித்து இனி மடிந்த களமாகிடுவோம் என்று மனதிலெண்ணி பொன்னர் ஈஸ்வரரரைத் தானினைத்து மாயன் பெருமாளை நினைத்து மாண்டுவிடப் போகையிலே மாண்டிடுவோம் என்று பொன்னர் மாயன் துதி செய்கையிலே |