பொன்னர் மடிந்திடுவார் என்று மாயவன் வருதல் | வல்லான தன்னுயிரை பொன்னர் வாள்முனையில் மாய்க்கிறாரென்று வைகுந்தம் பதியிருக்கும் மாயவானர் ஓடி வந்து அந்த அலகு மரபுவைத்து மாயன் அப்போது நிற்கையிலே அவர் வட்டமிட்டு பவனிகொண்டு பொன்னர் அறுபதடி பின்குதித்து வட்டமிட்டு விளையாடி பொன்னர் வாள் மேல் குதிக்க வருகையிலே உக்கிரமாய்வாரதுகண்டு மாயன் முனைவாளை சாய்த்தாரப்போ வாள்முனை சாயுதென்று பொன்னர் மார்புக்கு நேராகவந்து ஆக்கரித்து குலவையிட்டு பொன்னர் அதட்டிக் குதிக்கையிலே ஆக்கரித்துத் தாண்டையிலே ஆயன் அடிவாளைத் தட்டிவிட்டார் வாளும் வளைந்ததப்போ பொன்னர் மண்டியிட்டுப் போய்விழுந்தார் வாளும் வளைந்தபின்பு நாம் இந்த மண்டலத்தில் இருக்கலாமா என்று மனதிலெண்ணி பொன்னர் ஊடுருவத் தான்பார்த்து இறந்து போற சீவனுக்கு இனி எண்ணி எண்ணிப் பார்க்கலாமா மந்திரவாள் தானெடுத்து அதை வகையாய் நிறுத்தி வைத்து வாள்மேல் குதிக்கவேதான் பொன்னர் மனது துணிந்துமப்போ வாள்மேலேதான் குதிக்க பொன்னர் வருகிறார் முன்னாக வானுலகம்போன உயிர் சங்கரை திரும்பி வரவழைத்தார் கைலாசம்போன உயிர் சங்கரை கையோடு தானழைத்தார் குமாரசங்கர் தன்னுயிரை மாயன் கூட்டிப் படைத்தாரப்போ | | |
|
|