அங்கம் பதைக்குதப்போ சங்கர் மேனி அனல்காந்தல் வீசுதப்போ கண்கள் விழிதிறந்து சங்கர்மெல்ல காலுதைத்துக் கொள்ளுகிறார் | சங்கர் எழுந்திருத்தல் | கண்டாரே கண்ணாலேதான் பொன்னர் கனத்தமுடி வேந்தரசர் வலமாகச் சுத்திவந்து சங்கருட வாய்த்த முகம் பார்க்கையிலே துங்கமதயானைபோல குமாரசங்கு தூசிபரிமுண்டு கனத்தமத யானைபோல சங்கர் காலூன்றி எழுந்திருந்தார் கட்டித்தழுவியேதான் சங்கரை கண்ணோடே சேர்த்தணைத்து கட்டிப்பிடித்தேதான் பொன்னர் தம்பியரைப் பார்த்துமப்போ மதியம் வந்த சூரியனை சுவாமியை மழைமேகம் சூழ்ந்தாப்போல் விதிகள் வந்து சூழ்ந்ததினால் காரணத்தை விலக்கிடவும் கூடுமா என்செய்வேன் தம்பியரே ஈஸ்வரனார் தன்செயலுக்கு அந்தமொழிகள் சொல்லி பொன்னர் அழைத்தாரே தங்கையரை வாராய் இளவரசி உத்தமி வாள்வீரன் தங்கையரே வெள்ளாளன் உடன்பிறந்த உத்தமிவேதப் பிராமணியே உத்தமாபத்தினியே அம்மா ஒருசொல்லு வாசகியே வெற்றிமன்னன் பறைநகுலன் அந்தவீரபாகு சாம்பானை அவனை எழுப்புமென்று பொன்னர் அப்பனைகள் செய்தபின்பு அந்தமொழி கேட்டு உத்தமி அதிதுரிதா யோடிவந்து வெற்றிமன்னன் பறைநகுலன் அவனுடவிடாச்சகளம் வந்துமப்போ | | |
|
|