பறைச்சி பெற்ற பாலகனே நீ பரலோகம் சேர்ந்தையடா வெற்றிமன்னா பறைநகுலா நீ விடாய்ச்சகுளம் ஆனாயடா முந்திப்பிறந்தவண்டா முதல்நாளையிலே சங்கத்தைவென்றவண்டா சனத்தில் பெரியவண்டா நீ சாஸ்திரத்தில் வல்லவண்டா உன் அலகைப் பறிக்கவடா ஆள் ஒருவரைக் காணேனடா அலுகுநழுவியேதான் உன் அங்கம் பொருதவேணும் உன்வாளைப் பறிக்கவடா மனிதரொருவரைக் காணேனடா சிவனை நினைத்துமப்போ ஸ்ரீ ராமரைத் தானினைத்து பேர் கொடுத்த பொன்னம்பலம் சுவாமி பொசிவாசி ஐயாவே பொசிவாசி ஐயாவே புண்ணிரைத் தானினைத்து | வீர சாம்புவனை எழுப்புதல் | எடுத்தாள் திருக்கரகம் உத்தமி ஏந்தினாள் தீர்த்தமதை தீர்த்தத்தை வாரி நாலுதிசைபார்த்து விட்டெறிந்தாள் வாரியே தீர்த்தத்தை வீரபாகுமேல் விட்டெறிந்தாள் சித்தமிரங்கியேதான் சுவாமி சிவனாரும் காட்சி தந்தார் வானுலகம்போன உயிர் வீரபாகுக்கு மார்மூண்டு தான்திரும்பி சிவலோகம் போன உயிர் வீரபாகு திரும்பியே வந்திட்டுதே அங்கம் பதைக்குதப்போ வீரபாகு மேல்பட்ட அலகு நழுவுதப்போ அலகு நழுவியேதான் வீரபாகு அங்கம் பொருதுதப்போ கண்கள் விழிதிறந்து வீரபாகு காலுதைத்துக் கொண்டேதான் ஆக்கரித்துச் சத்தமிட்டு வீரபாகு அதட்டி எழுந்திருந்து அட்டமிட்டு பவனிகொண்டு வீரபாகு அறுபதடி பின்குதித்து வட்டமிட்டு ஓடிவந்து பெரியாண்டவர்க்கு வாகுடனேதெண்டனிட்டு அட்டம் பணிகள் செய்து சாம்பான் அடிவணங்கி நிற்கையிலே | | |
|
|