பக்கம் எண் :

492அண்ணன்மார் சுவாமி கதை

அடாவெற்றிமன்னா பறைநகுலா வீரபாகு சாம்புவனே
அத்தைமக்கள் படுங்களந்தான் அடையாளம் கண்டதுண்டா
அந்தமொழிகள் சொல்ல வீரபாகு அப்போது ஏது சொல்வான்
அத்தைபிள்ளை படுகளந்தான் சுவாமி அடையாளம் கண்டுவந்தேன்
அணிஅணியாப் போர் செய்து வேடுதளம் அத்தனையும்தான்மடிந்து
வேடுபடைசங்கரித்து வெற்றிகொண்டு வாரபோது
மலையாவி தணல்வீசி அத்தைபிள்ளை சேனை மயக்கமாய்ப் போச்சுதப்போ
தண்ணீர் தண்ணீர் என்பாரும் தாகவாட்டம் ஆவாரும்
மேனிமயங்குவாரும் மெய்வாட்டம் ஆவாரும்
அந்தநல்ல வேளையிலே அவ்வனத்தில் தானுமப்போ
மலையுரம்புபோல சுவாமி வந்தது நச்சுநீரும்
நச்சுநீர் வாரியுண்டு அத்தைபிள்ளை சேனை நல்லுயிரும் மாண்டு விட்டார்
படர்ந்தது ஆலமரம் சுவாமி இருண்டது சோலையிலே
குடைவேலமரத்தடியில் எதிரில்லாப்பெருமாள் கூடாரம் கண்டுவந்தேன்
கதித்தது ஆலமரம் அதன் அடியில் கண்டுவந்தேன் அடையாளம்
அந்த அடையாளமெல்லாம் வீரபாகு ஆண்டவர்க்குச் சொன்னபின்பு

 
  வீர சாம்புவன் மடிதல்
 
வேர்த்து விறுவிறுத்து வீரபாகு மேனியெல்லாம் தானொடுங்கி
கண்கள் விழிசொருகி வீரபாகு கால்கள் தடுமாறி
மயக்கங்கள் ஆகியேதான் வீரபாகு மண்டியிட்டுத்தான் விழுந்தான்