பண்டறிந்த படுகளமாய் வீரபாகு பாடாகச் சாய்ந்துவிட்டான் கண்டுமனதிலெண்ணி பொன்னர் இந்தக் காரணத்துக்கென்னசெய்வேன் மாண்டு போனதைப்பார்த்து நாம் மனதிலெண்ணப் போதாது அத்தைபிள்ளை படுகளத்தை அவரையினிப் பார்க்கவேணும் மணப்பாறை சந்துவழி குதிரைவிட்டு வாரார் இருவருமாய் அண்ணருடன் பிறந்த உத்தமி அண்ணருடன் பின்வாராள் வாரவழி தடங்கள் வீரமலை வனங்கள் செடிகளெல்லாம் பார்த்த இடங்களெல்லாம் படைக்காடும் சவக்காடும் பார்த்து மனதிலெண்ணி இது பார்த்ததொரு ரணகளமாய் கண்ணாலேதான் பார்த்து பொன்னர் மாயனுட காரணந்தான் அத்தனையும் என்று மனதிலெண்ணி பொன்னர் குதிரைவிட்டு இறங்கி நடந்துவாரார் கட்டியங்கூறுபவர் கவிவாணர் மாண்டதெல்லாம் வெள்ளித்தடிக்காரர் விருது மன்னர் மாண்டதெல்லாம் போட்டமண்டி வாங்காத பொந்திலியர் மாண்டதெல்லாம் படைக்குத்தலைவர்களும் பட்டாணி ராவுத்தமார் ஆனைபடை சேனைதளம் அத்தனையும் மாண்டதைத்தான் பார்த்து மனதிலெண்ணி சுவாமி பரமனுட காரணந்தான் மனதிலேதான் எண்ணியப்போ மூவரும் வருகுமந்த வேளையிலே பச்சைக்குடைவிருதும் மைத்துனரைப்பத்தி வந்த ராணுவமும் அத்தைபிள்ளை படுகளத்தை பொன்னர் அடையாளம்கண்டாரப்போ உத்தமியைத்தான் பார்த்து ஏதுசொல்வார் அண்ணருந்தான் வாராயிளவரசி அம்மா வாள்வீரன் தங்கையரே அத்தைபிள்ளை மைத்துனரை அவரை எழுப்புமம்மா | | |
|
|