பக்கம் எண் :

496அண்ணன்மார் சுவாமி கதை

அங்கம் பதைபதைத்து மைத்துனர் மேனி அனல்காந்தல் வீசுதப்போ
மேனிவெதும்பியேதான் மூவருக்கும் வெதுப்பங்கள் தானாகி
நித்திரை வந்துமப்போ அத்தைமக்கள் நினைவு தடுமாறினாப்போல்
சொப்பனங்கண்டவர்போல் அத்தைமக்கள் துடியாய் எழுந்திருந்தார்
சேரவே கச்சைகட்டி அத்தைமக்கள் சீராவைத் தானெடுத்து

அப்போ ஆக்கரித்துக் குலவையிட்டு அவர்கள் அறுபதடிபின்குதித்து
வட்டமிட்டுவிளையாடி பெரியாண்டவர்க்கு வணங்கிப் பணிகள் செய்து
கட்டித் தழுவியேதான் பெரியாண்டவர் முன்னே கடைக்கண்ணில் நீர்சொரிந்து
மதியம்வந்த சூரியனைமழை மேகம் சூழ்ந்தாப்போல்
விதிகள்வந்து சூழ்ந்த தென்றால் மைத்துனரே விலக்கமுடியுமா?
என் செய்வோம் மைத்துனரே நாம் ஈஸ்வரனார் செயலுக்கு
இந்தநல்ல காரணங்கள் சுவாமி நமக்குஇட்டபடி போகுமா
மைத்துனரைத்தான்பார்த்து பொன்னர்வந்த காரணமெல்லாம்பேசி
பொன்னம்பலசுவாமி மைத்துனர்க்குஎன்னசொல்வார் ஆண்டவனார்
எங்களையர் குன்றுடையார் தாயார் பெரியநாச்சியாரும்

பொன்னம்பலத்திலே சுவாமி பொருந்தி வரங்கேட்கையிலே
புத்திரசந்தானவரம் அவர்கள் புகழுடனே கேட்கையிலே
நமக்கு என்றும் பதினாறு என்று ஈறேற்றம் கேட்காமல்
வயது நூறு என்று சுவாமியிடம் வாக்கு வரங்கேட்காமல்
பதினாறு போதுமென்று தாயார் பெரியநாச்சி பாலன்வரம் வாங்கினார்