நமக்கு வயது துலைந்திட்டுது நாம்வந்த கெடுவாச்சு இனிநாம் மாயனுடபக்கத்திலே வைகுந்தஞ் சேர்ந்திடுவோம் இருந்த நாள் போதுமினி ஈஸ்வரர் பாதம் சேர்ந்திடுவோம் இது ஆறாநெருப்போ அவியாத செந்தணலோ அத்தைமக்கள் மூவரும் நீங்கள் முத்திரைதான் பெற்றவர்கள் சீரங்க ராயருட நீங்கள் திருநாமம் பெற்றவர்கள் உங்கள் திருநாமம் பேரு சொல்ல ஒரு மானிடவர் தானுமில்லை வாருங்காண் மைத்துனரே வார்த்தை சொல்லக்கேளுமினி அந்தமொழிகள் சொல்ல மைத்துனர் அப்போது சொல்லுகிறார் மாதாகுருவல்லவோ உங்கள் தங்கை மந்திரியும் அவளல்லவோ தாதாகுருவல்லவோ உங்கள் தங்கை தந்திரியும் அவளல்லவோ ஆதிநாளையிலே வாரதைத்தான் முன்னாலே சொல்கிறவள் அவளை அழைத்து நீர் ஆலோசனை கேளுமென்றார் எதிரில்லாப் பெருமாள் இந்தவகை சொன்னபின்பு உத்தமியைத்தானழைத்து ஏது சொல்வார் நல்லபொன்னு வாராயிளவரசி அம்மா வாள்வீரன் தங்கையரே வெள்ளேடுவாசிக்கும் அம்மா வெள்ளாளன்குடிப்பிறந்தவளே உத்தமாபத்தினியே அம்மா ஒரு சொல்லுவாசகியே அனலில் பிறந்தவளே என் உத்தமி ஆகாசகேசரியே பாஞ்சாலன்தன் மகளே அம்மா பத்தினி துரோபதையே வேதப்பிராமணியே வெள்ளாளன் தங்கையரே வாழ்ந்தநாள் போதுமம்மாநாம் வைகுந்தஞ் சேரவேணும் இருந்தநாள் போதுமம்மாநாம் ஈஸ்வரர்பாதம் சேரவேணும் அத்தைமக்கள் மூவரும் அவர்கள் முத்திரைதான் பெற்றவர்கள் | | |
|
|