பக்கம் எண் :

498அண்ணன்மார் சுவாமி கதை

சீரங்கராயருட அவர்கள் திருநாமம் பெற்றவர்கள்
அவர்கள் திருநாமம் பேருசொல்ல சீமையிலே மானிடவர் காணோமினி
ஆறாநெருப்பே என்உத்தமி அவியாதசெந்தணலே
அம்மாதிருக்கரகம் சிரசில்வைத்து நம்மதிருநாமம் பேருசொல்ல
வையகங்கள் தானறிய நம்மைவைத்து நடத்தவேதான்

உலகங்கள் தானறிய நம்மைஎடுத்து நடத்தவேதான்
இந்தநல்ல சீமையிலே அம்மாஒரு மானிடவர் காணோமினி
யாரை அழைத்துத்தான் அம்மா அதிகபாரம் தலையில் வைப்போம்
எவரை அழைப்போமினி இந்தபாரம் தலையில் வைக்க
அந்தமொழிகேட்டு அண்ணரைப் பார்த்து அப்போதுஏது சொல்வாள்

ஆரை அழைத்தாலும் நம்மனதுபடிஆன பிள்ளையாருமில்லை
எவரை அழைத்தாலும் நம்குணமறிந்து ஏற்றபிள்ளையாருமில்லை
எழுவக்கரியானென்று வீரமலைவனத்தில் இருக்கிறான் வலைப்பிறவி
 
தங்கை எழுவக்கரியானை அழைக்கச் சொல்லுதல்
 
காட்டுக்கனி பறித்து அந்த கானகத்தில் குடியிருப்பு
கன்னிகளைக் கொண்டாடி அவன் அந்த கானகத்தில் குடியிருப்பு
தொட்டிலிலும் பிள்ளையவன்அண்ணா அவன் தொடையில் குழந்தை அவன்
நமக்குமடியில் குழந்தை அவன் அண்ணாவாளேறுஞ்சேவகனே
அவனை அழைத்து அண்ணா இந்த அதிகபாரம் தலையில் வைப்போம்