பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை499

கடைச்சீட்டு காகிதமும் வீரப்பூர்வலையனுக்கு கண்டெழுதிப் போடுமினி
வீரப்பூர் ஆதிக்க மென்று விளங்கி அதுவும்பெருக
அவன்வந்தால் கூட்டிவா வராதபோனால்மடிபிடித்துக் கொண்டுவா
இந்தப்படி ஓலை எழுதி உத்தரவு அனுப்புமண்ணா
அந்த மொழிகள் சொல்ல பொன்னர் அப்போ மனந்திரும்பி

சேமக்குருந்தோலை சுவாமி சேர்த்தெடுத்தார் வெள்ளேடு
வண்ணச்சுருளோலை எழுவக் கரியானுக்கு வாசகம் எழுதுகிறார்
தன்னுடைய பேருந்திருநாமம் (வலைப்பிறவிக்கு) தான்கண்டு எழுதுகிறார்
வந்தால் அழைத்துவா வராதபோனால் மடிபிடித்துக் கொண்டுவா
கடைச்சீட்டும் காகிதமும் பொன்னர் கண்டெழுதிவிட்டாரே
அந்தமாயச்சுருளோலை எழுவக்கரியான் மடியில் விழுந்ததப்போ
அந்தசெந்திருக்கும் காகிதமும் சீட்டுமிகப் பிரித்து
ஓலைச் சுருள்வாங்கி எழுவக்கரியான் உள்கருத்தைத்தான் பார்த்து

அப்போ அவனுக்கு கால்நடுங்கி கைநடுங்கி கண்கள் வெறிதாக்கி
அஞ்சிப்பயந்தேதான் அவன் அதிதுரிதாய் ஓடிவந்து
சுவாமிபாதஞ்சரணமென்று பொன்னர் பாதாரந்தான் வணங்கி
அட்டம்பணிகள் செய்து அடிவணங்கி தெண்டனிட்டு
வாய்பொத்திகைகட்டி பொன்னர் முன்னே வகையாக முன்னேநின்று
என்னை அழைத்ததென்ன சுவாமி எந்தனுக்குப்புத்தி என்ன
ஒன்றால் குறைச்சலில்லை வீரப்பூர் வலைப்பிறவி ஒருநாளும் தாழ்வுமில்லை