பக்கம் எண் :

500அண்ணன்மார் சுவாமி கதை

வாழ்ந்தநாள் போதுமென்று நாங்கள் வைகுந்தம் சேருகிறோம்
இருந்தநாள்போதுமென்று ஈஸ்வரர் பாதம் போய்ச்சேருகிறோம்
வைத்து நடத்தவேதான் நீ எனக்குக் குழந்தையடா
மைந்தன் என்று சொல்லி வரவழைத்தேன் நானும் உனை
இந்தக்கரம் சிரசில்வைத்து திருநாமம் பேருசொல்லி

வீரப்பூர் ஆதிக்கமென்று என்றைக்கும் விளங்கப்பதிலிருந்து
எங்களுடபேரு சொல்லி எங்களையும் கொண்டாடு
அந்த மொழிகள்சொல்ல எழுவக்கரியான் அப்போது ஏதுசொல்வான்
அதிகபாரம் நான் சுமக்க சுவாமி அடியேனால் ஆகாது
வாயெச்சில் கையெச்சில் சுவாமி திரேகமெல்லாம் எச்சில்

பக்கஎச்சில் பழுவும்எச்சில் சுவாமி பதினாறுரூபம் எச்சில்
எச்சில்எச்சில் என்திரேகமெல்லாம் இன்பதுன்ப மெத்தமெத்த
சுவாமிஇது ஆறாநெருப்போ அவியாத செந்தணலோ
எச்சில் இளந்தீட்டு சுவாமி இது ஏற்காது உங்களுக்கு
அந்தநல்ல வார்த்தை சொல்ல பொன்னர்அப்போது ஏதுசொல்வார்

என்பாரம் நீ சுமக்க எனக்கு ஏற்ற பிள்ளை நீ தாண்டா
மைந்தன் இல்லாதவர்க்கு எங்களுக்கு மைந்தன் குழந்தையடா
தொட்டிலும்பிள்ளை முந்தினது எனக்கு தோளிருக்கும் பிள்ளையடா
செய்யாத குற்றமடா ஒருசெய்யத் தாழ்வு வந்தாலும்
ஆறுகுற்றம்நூறுபிழை வீரப்பூர்வலைப் பிறவி அடிதப்பி இருந்தாலும்