ஏதுகுற்றம் செய்தாலும் நாங்கள் எல்லாம் பொறுத்துக்கொள்வோம் கொண்டுமனம் பொறுத்துக்கொள்ளுகிறோம் என்று பொன்னர் திங்களொருகிழமை வந்தால் எனக்கு தெய்வபூஜை செய்யவேணும் சுக்கிரவார நாள்தேடி வருஷம் ஒருகிழமை தெய்வபூஜை செய்யுமடா தெய்வபூஜை வேளையிலே உன்னைக்கண்டு நான்போறேனடா அந்தவகை சொல்ல எழுவக்கரியான் அடிவணங்கித் தெண்டனிட்டு |
எழுவக்கரியானுக்கு விடை கொடுத்து அனுப்புதல் |
வாய் பொத்தி கைகட்டி எழுவக்கரியான் வகையுடனே நிற்கையிலே வேண்டிவிடை கொடுத்து எழுவக்கரியானுக்கு வெண்ணீறுந்தான் கொடுத்தார் வாழ்த்தி விடைகொடுத்து எழுவக்கரியானுக்கு உத்தமிவைத்தாள் அதிகபாரம் அதிகபாரம் தலையில் வைத்து எழுவக்கரியானை அனுப்பிவைத்தார் ஆண்டவரும் அப்போ குந்திமாதேவி மக்கள் குலவீரர் ஐவருமாய் பாண்டுராஜன் மக்கள் இவர்கள் பஞ்சவர்கள் ஐவருமாய் ஐவரும்சேர நின்று சுவாமிக்கு அர்ச்சனையும் செய்தார்கள் சிவனைத்தொழுது ஸ்ரீராமரைத் தானினைந்து சிவலோகம் நாங்கள் வந்து சுவாமி தெரிசினைகள் காணவேதான் பொன்னுலகம் நாங்கள்வந்து சுவாமியுட பொற்பாதம் காணவேதான் எங்களுக்குச்சுவாமி இப்போ ஈடேற்றம் தரவேணும் |