பக்கம் எண் :

502அண்ணன்மார் சுவாமி கதை

ஐவரும்சேர நின்றுஇவர்கள் அர்ச்சனையும் செய்கையிலே
ஐவரும்சேர நின்றுசுவாமியை அடிவணங்கி நிற்கையிலே
அப்போ ஆதிபரமேஸ்வரனார் ஆயனைத்தானினைந்து
மாயனைத் தானினைந்து மகாதேவர் சொல்லுகிறார்
குன்றுடையாகக் கவுண்டனொடு பெரிய நாச்சி குழந்தை வரங்கேட்கையிலே

பஞ்சவர்கள் ஐவரையும் பாலன்வரம் பாக்கியம் தந்தோமே
பதினாறு வயதுக்கு பஞ்சவர்கள் பாருலகம் ஆண்டிருந்தார்
அவர்களுக்கு வயது முடிந்திட்டுது வார கெடுவாச்சு
சித்தம் திரும்பி பரமேஸ்வரனார் திருவாக்குச் செய்தபின்பு
பஞ்சவர்சகாயன் சுவாமி பாருலகை அளந்தவர்தான்

ஓரடியாய் புவியளந்த உலகளந்த மாயவர்தான்
பாருலகில் மன்னரை பஞ்சவர்கள் ஐவரையும்
சிலைவீரரைவரையும் சுவாமி சிவலோகம் சேர்க்கவேதான்
சிலைவளைத்து வில்லெடுத்து சுவாமி செகந்தனிலே ஊன்றி வைத்தார்
 
   ஐவரும் வைகுந்தம் சேருதல்
 
மாயனுட அட்சரந்தான் அது மழைக்கால் விழுந்தாப் போல்
பொன்னுலகம் பூலோகத்துக்கும் ஒரு பொன்சுடராய் வந்திறங்கி
ரகுராமர் அட்சரந்தான் ஒரு ஆணிப் பொன்னேணியுமாய்
பொன்னேணி பொன்படியாம் ஒரு பொன் சுடராய்வந்திறங்கும்
ஸ்ரீராமர் அட்சரந்தான் ஒரு சுடர்வழியாய் வந்திறங்கி

கைலாசமாம் வீரமலைக்கும் மாயனுட காரணத்தால் வந்திறங்கி
ஐவரும் சேர்ந்து பொன்னுலகம் அப்போது வாரார்கள்
அப்போ வைகுந்த நாதருமே ஐவரையும் வைகுந்தம் சேரவென்று