பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை503

பரமேஸ்வரனாரும் ஐவரையும் பார்த்து மகிழ்ந்தார்கள்
அந்த மொழி கேட்டு ஆதிமகா விஷ்ணுவுந்தான்
பொன்னேணி வழியாக போகிறார் பஞ்சவர்கள்
தெய்வலோகத்திலே சேர்ந்தார்கள் ஐவருந்தான்
சொர்க்க லோகம் தானும் ஐவர் சுகமுடனே சேர்ந்தார்கள்

சுவாமியுட பொற்பாதம் ஐவரும் தயவுடனே போய்ச்சேர்ந்தார்
வைகுந்த லோகத்திலே ஐவரும் வகையுடனே தானிருக்க
பெரிய மலை மாதாவும் பிரியமுடன் அப்போது
ஆதி சிவன் மாயவரை அன்புடனே தான் நினைந்து
ஆதி முதல் நாளையிலே அன்று கொடுத்த வரம்

பொன்னாண்டார் தன்னாலே பூஜைக்கிடமாகுமென்று
வாக்கு மனுக்கொடுத்தீர் வையகத்தில் பூஜை கொள்ள
சொன்னது மெய்யானால் சோதனைகள் அப்போது
வரம்கொடுக்க வேணுமென்று ஈஸவரி வணங்கிப்பணி செய்தாள்
அப்போது ஈஸ்வரரும் ஆயரையும் தானழைத்து

வைகுந்த ராமரை வகையுடனே தான்பார்த்து
சொல்லுகிறாரப்போது சுகமுடனே ஈஸ்வரரும்
பஞ்சவர்கள் தன்னாலே ஈஸ்வரி பாருலகமெல்லாம் பூஜைகொள்ள
மன்னவர்கள் தன்னாலே மண்டலமெல்லாம் பூஜையிட
பொன்னர் சங்கர் தன்னாலே பூஜைக்கிடமாகுமென்று

வாக்கு மனுப்படிக்கு வன்மையுள்ள பஞ்சவரை
வீரமலைக்குடையாளில் வீற்றிருக்கும் மாதாவிடம்
பஞ்சவர்கள் ஐவரையும் பத்தினி துரோபதையும்
அனுப்பிவையுமென்று ஆதிசிவன் தானுஞ்சொல்ல
அப்போது மாயவனார் ஐவரையும் தானழைத்து