பத்தினி துரோபதையை பாங்குடனே தானழைத்து வாருமினிப் பஞ்சவரே என்று வகையுடனே தானழைத்து வீரமலைக்குடையாளுக்கு நீங்கள் விதமுடனே தானும்போய் ஈஸ்வரியாள் தன்னிடத்தில் இதமுடனே நீங்களுந்தான் பூலோகமண்டலத்தில் பூஜை மிக வாங்குமென்றார் அனுப்பி வைத்தார் மாயவனார் ஐவரையுந்தானுமப்போ மன்னர்கள் ஐவரும் மாயவரை தெண்டனிட்டு பத்தினி துரோபதையும் பாங்குடனே தெண்டனிட்டு பொன்னுலகம் விட்டிறங்கி பூவுலகம் வந்தார்கள் |
பூசை வாங்க ஐவரும் பூலோகம் வருதல் |
வீரப்பூர் குடையாளில் விதமுடனே ஐவர்களும் வந்தார்கள் பூலோகம் வகையான ஐவர்களும் பஞ்சவர்கள் தானும் பண்புடனே அப்போது குந்தி மாதேவி மக்கள் குலவீரர் பஞ்சவர்கள் பாஞ்சால ராஜன் மகள் பத்தினி துரோபதையும் வீரப்பூர் குடையாளில் விதமுடனே தானிருந்தார் இந்தப்படி தானும் இதமுடனே வீற்றிருந்து பொறுமை பொறுத்த பொன்னம்பல சுவாமி சின்னண்ணர் வாள்வீரர் சிறுபுலி குமாரசங்கு நல்லதங்கை உத்தமியும் நன்றாகத் தானிருக்க அத்தைபிள்ளை மைத்துனரும் அவர் தம்பி இருவர்களும் மலையுடனே தான் பிறந்த மந்திர மகாமுனியும் வெற்றிமன்னன் பறைநகுலன் வீரபாகு சாம்பானும் ஒண்டிக் கருப்பண்ணனும் உற்றபடைத் தளமும் எல்லோரும் தான் கூடி நாம் இந்தமலை தனிலே இருந்துமிங்கே வாழ்ந்தோ மென்றால் ஏற்காது என்று சொல்லி பொந்திப்பசி தீர போய் அங்கே மாதாவை |