பக்கம் எண் :

506அண்ணன்மார் சுவாமி கதை

நம் வெண்முடியைக் காத்திருக்கும் வீரமகா முனியும்
தவசடியை காத்திருக்கும் தந்தன் கருப்பண்ணனும்
இத்தனை பேர்களும் தான் இந்த மலைதனிலே
காய்கனிகள் நாங்கள் தின்று காத்திருந்தோம் மாதாவே
இனி காய்கனிகள் சிக்காது கானகத்தில் உத்தமியே

இன்று முதல் கொண்டு இனி ஆகாரம் இல்லாமல்
எரியுதம்மா மாதாவே எங்களுட வயிறுமிப்போ
பொறுக்க முடியாது பொத்தி பசி மெத்தவம்மா
இப்படித்தான் உன்னருகில் இருந்தோமே யாமாகில்
எங்கள் பசியாறுமோ தான் எங்களை யாரென்று தானறிவார்?

மலை மேலே நாமிருந்தால் மானிடவர் அறிவாரோ
என்று பொன்னர் சங்கருந்தான் எடுத்துரைக்கத் தான் கேட்டு
மாதாவும் அப்போது மனமகிழ்ந்து ஏது சொல்வாள்
தம்பியடா வாள்வீரா சதுரமுடி பொன்னாண்டா
நீங்கள் பட்டதொரு நாள் முதலாய் பராமரிப்பாரொருவரில்லை

நீங்கள் சென்றதொரு நாள்முதலாய் சேர்த்தணைப்பார்யாருமில்லை
நீங்கள் மாண்டதொரு நாள்முதலாய் உங்களை மனிதர் நினைப்பத்தில்லை
தாகம் தணிப்பாரில்லை தண்ணீர் விடாய் தீர்ப்பாரில்லை
என்றுசொல்லி வந்தாய் உன்திறத்தை விட்டு விட்டு
இப்பவே நீர்தானும் இந்த மலை விட்டிறங்கி

வீரப்பூர் வாழும் மேவளக்க வார் குளத்தில்
கம்பைய நாயக்கனென்று கனமாக பேர்படைத்து
அரசுதனை ஆளுகிறான் அவனருகே தான் போய்
இரைக்கோலும் கம்பளந்தான் இருக்குமந்த ஊர் போய்
அவர் படுத்திருக்கும் வீடுதனில் பாங்குடனே உள்புகுந்து

சொப்பனம் உண்டு பண்ணி சோதனையாய்த் தான் நடத்தி
பண்ணிவைத்துப் பூஜை பாங்குடனே வாங்குமென்றாள்