என் தாயே மாதாவே எமக்கு இது போதுமென்று சொல்லி அட்டம் பணிந்து அடிவணங்கித் தண்டனிட்டு உத்தரவு வாங்கி ஓடிவந்தார் பொன்னர் சங்கர் வீரமகாமுனியை முன்னே நடவுமென்றார் கம்பைய நாயக்கன் முன்னே கடுகியே தானும்போய்
அரட்டியும் சொப்பனமும் ஆர்ப்பாட்டம் பண்ணிவைத்து பூஜையும் வாங்குமென்று புகழ்பெரிய ஈஸ்வரியும் வாக்கு மனுக்கொடுத்தாள் வன்மையுடனிப்போது போய் வருவோம் என்று பொன்னம்பல சுவாமி அங்கி நிசாரு தொட்டு அதன் மேலே கச்சைகட்டி
கச்சை வரிந்து கட்டி கருங்கச்சை சுங்குவிட்டு சந்திரகாவி உருமாலை தலைநிறையத் தானுங்கட்டி ஆபரணம் தானணிந்து அழகு சமுதாடு தான் சொருகி இடதுகையில் கேடயமும் வலதுகையில் வாளெடுத்து பொற்புரவி மேலே பொன்னர் சங்கர் தானேறி
மகாமுனிவர் தானும் வகையுடனே அப்போது காவியுடை அணிந்து கனத்த சடைதான் போட்டு மேலெல்லாம் சாம்பல் மெய் நிறையத் தானணிந்து கண்டர் கோடாலியைக் கைதனிலே தானெடுத்து வளைதடியும் சக்கரமும் வாய்த்ததடி தோளில் வைத்து
மூவரும் தானடந்து மூர்க்கமுடன் தான் கூடி சாம்புவனை முன்னடத்தி சுவாமியவர் பின் நடந்தார் கம்பைய நாய்க்கன் கருத்தில் அவர்தானும் ஆதேசமாக அன்பாகக் காணலுற்றார் மங்கையரும் தானும் மணிமெத்தை மேல்படுத்து
தூங்குகிற வேலையிலே அவர் சொப்பனமுங் கண்டாரே ஆசார வாசலிலே அவர் தளங்கள் தான் சூழ எல்லவருங்கூடி இருக்கும் சபைதனிலே