வீரமலைமேலிருந்து மின்னல் பறந்தாப்போல் மனவேகங் கொண்டு வருகுது குதிரை ரெண்டு சோடி குதிரை கொண்டு துலங்கு பட்டாணியைப் போல் வாய் வேகங்கொண்டு வல்லையங்கள் தானெறிந்து வாரவனைக் கண்டு மயங்கியவன் கம்பையனும் கண்டு பயந்து கம்பையனுந் தானோடி அவர் மெத்தப்பயந்து மிரண்டுவங்கே ஓடுகையில் வீரமகாமுனியையும் மின்னல் பறந்தாப்போல் பின்னாலே தான் தொடர்ந்தார் பித்தனைப்போல் அவர் பத்திப்பிடித்திழுத்து பல் கடித்து ஆக்கரித்து உருட்டி விழி விழித்து உலாவியர் தான் வளர்ந்து அண்டரண்ட மூடுருக அண்டகோளத்தை முட்ட ஓங்கி வளர்ந்து அவர் ஒரு கையிலே தெண்டோங்க இரும்பு தெண்டாயுதத்தை எடுத்துமங்கே ஓங்கி நிற்க கண்டு பயந்து கம்பையனும் கால்கள் நடுநடுங்கி வாயும் தடுமாற வாய்த்த உடல் நடுங்க உடல் நடுக்கம் பாய்ந்து உளறியவன் வாய் வறண்டு கட்டிப்பிடித்து அவர் கையுதறக் காலுதற சேர்த்துப் பிடித்துமவர் தேவியின் மேல்தான் விழுந்தார் அரண்டு அவள் மேல் விழுக அவர்தேவி தானெழுந்து அஞ்சாதே என்று அடைவாக நெஞ்சுதட்டி அரண்டு எழுந்திருந்து அவர் தேவிதனைப் பார்த்து மங்கையரே பெண்ணங்கே வார்த்தையது கேளுமடி இத்தனை நாளும் இது காலம் நாமிருந்தோம் இந்தப்படி சொப்பனங்கள் இனிக்கண்டு பயந்ததில்லை ஆனாலும் இப்போ அதிசயமாய்க் கண்டேன் நான் சொப்பனம் கண்டதினி சொல்லுவீர் மன்னவரே சொல்லுகிறேன் தேவியரே சொப்பனத்தை நீர் கேளும் நம்ம வீரமலை மேலிருந்து மிரண்ட சிங்கம் போலே தான் மனவேகங் கொண்டுமேதான் வந்தது குதிரை ரெண்டு | | |
|
|