புரவியின் பேரில் புகழ்வீரர் ராஜாக்கள் பதினெட்டு ஆயுதமும் பாங்குடனே தானணிந்து வல்லையங்கள் கைபிடித்து வகையாகத் தானெறிந்து எறிந்து துடர்ந்தார் என் பேரில் வாளெடுத்து நான் பயந்து எழுந்திருந்து பாங்காக ஓடிவந்து பின்னொருவன் ஓடிவந்து பின்படியாய் தான் பிடித்து சடையு முடியுமுடனே தானொருவன் ஓடிவந்து ஆகாசம் பூமிமட்டும் அன்பாகத் தானெழுந்து ஓங்கி அடித்தான் உத்தமியே நான் பயந்து பதறி எழுந்திருந்தேன் பைங்கிளியே நான்தானும் அந்த மொழிகேட்டு அவள் தேவி ஏது சொல்வாள் என்ன இருந்தாலும் ஏர்க்கோலுப் பொம்மணலும் ஆதி ரெகுராமர் ஐயர் இருக்கு மட்டும் மற்றுமொரு தெய்வம் வருமோ தான் நம்மிடத்தே என்று தேறுதலைச் சொல்லி தேன் மொழியாள் வீற்றிருந்தாள் காராளர் பொன்னர் சங்கர் காதிலது கேட்டு ஆகட்டு மென்று சொல்லி அப்புறமே தானும் வந்து சாம்புவனைத் தானழைத்து சின்னாண்டர் தயவுடனே ஏது சொல்வார் இவன் லாயமதில் புகுந்து நல்லதொரு புரவி யெல்லாம் கழுத்தறுத்துக் காவல் கொண்டு கடுகியிங்கே வாருமென்று அப்படியே நல்லதென்று ஆனதொரு சாம்பானும் குதிரையைக் கழுத்தறுத்து குலகாரன் காவல்கொண்டு கடிய புரவியெல்லாம் காணம்புல் தின்னாமல் பண்ணிவைத்து சாம்பானும் பாதம் பணிந்து நின்றான் நல்லதென்று காராளர் நல்ல முனியைத்தான் கூட்டி வந்து மலைதனிலே வாகாக வீற்றிருந்தார் பொழுது விடிந்தவுடன் நாய்க்கன் பொட்டெனவே தானெழுந்து | | |
|
|