ஏழடுக்கு திருக்கரகம் இதமாக உண்டுபண்ணி மாதாவை உண்டு பண்ணி மண்டபத்தில் உள்ளே வைத்து தங்கை பிறவியர்க்கு தனிக்கரம் உண்டு பண்ணி மாதாவிருக்கும் வடபுறம் தானும் வைத்து அண்ணன்மாரிருவரையும் அத்தை பிள்ளை மூவரையும் வீரமாகமுனியும் விதமாக உண்டு பண்ணி சாம்பான் ஒருவனையும் தனியாக வெளியில் வைத்து பூஜைகள் நடத்துமென்று புகழ்வீரர் தானுரைக்க நல்லதென்று நாட்டாரும் நலமுடனே தான் பணிந்து அவரவர் ஊருக்கு அன்பாகத் தானடைந்தார் நாட்டார்கள் போன பின்பு நாய்க்கர் அவர் தானும் ஆசார வாசலிலே அனைவோரும் தான் கூடி வீதிக்கு வீதி வெற்றித் தமுக்கடித்து நாளை திங்கள் கிழமை தெய்வபூஜை செய்வோமென்று ஊரிலுள்ள பேர்களெல்லாம் உத்தமர்கள் தான் கூடி ஆசாரவாசல் முன்னே அன்பாயிடம் பார்த்து நாட்டினார் பந்தல் நாய்க்கர் அவர் தானும் பந்தலும் போட்டு பட்டுமேல் கட்டுக்கட்டி வாழை கரும்புடனே மாவிலையுந் தோரணமும் சிங்காரஞ் செய்து சிறப்பாய் அலங்கரித்து பூவால் அலங்கரித்து பூச்சரங்கள் தொங்கவிட்டு பட்டணத்தில் உள்ளவரை பாங்காய் வரவழைத்து வைகை தலைமுழுகி வாருமென்று தானழைத்து கரகம் எடுக்க காரியப்பேர் வேணுமென்று ஆரை அழைப்போமென்று ஆலோசனைகள் புரிந்து கம்பைய நாய்க்கர் காதிலது கேட்டு | | |
|
|