பெரியக்காண்டிக்குப் பூஜை செய்ய எழுவக்கரியானை அழைத்தல்
நம்ம ஊழியத்துக்காரன் உக்கிராணந்தான் காக்கும் அம்பலக்காரன் வீரமலை ஆன பிள்ளை கண்டாயே எழுவக்கரியானும் இதமான பிள்ளை கண்டாய் மாதாவுக்கேற்ற பிள்ளை மன்னன் அவனிருந்து ஆலோசனை ஏது என்று அலகுரைத்தார் நாய்க்கருமே
நல்லதென்று சொல்லி நாட்டார்களப்போது எழுவக்கரியானை இதமாகக் கூட்டி வந்து நீ கங்கை தலை முழுகி கிருபையுடனிப் போது வாருமென்று சொல்லி வகையாய் அனுப்பிவைத்தார் வைகை தலைமுழுகி எழுவக்கரியான் வந்தானே அப்போது
அவனுக்கு கட்டுகளுமுள்ள தெல்லாம் கனமாகத் தானணிந்து ஆபரணம் பூட்டி அழகுபெறத்தானணிந்து காவியுடை உடுத்தி கழுத்தில் உத்ராட்ச மாலையணிந்து சாந்து புனுகு சவ்வாது மிகப்பூசி மல்லிகை ஆரம் வீரப்பூரானுக்கு மாராடி தான் போட்டு
முல்லை மலர்ச்சரத்தை வீரமலைக்கு முடிமேலே தான் சொருகி கரகத்தில் நீர் மொண்டு கரைமேலே தானும் வைத்து கரகந்தனை செப்பனிட்டு கனத்த மலர் பூவுகளும் பூமாலை கொண்டு வந்து பொற்கரகம் தானணிந்து மருவு மருக்கொழுந்து வாசமுள்ள செண்பகப்பூ
மண்டபத்துக்குள்ளாக எழுவக்கரியானுக்கு வாழையிலை போட்டு மாதா கரகந்தனை எழுவக்கரியானுக்கு வாழையிலை போட்டு