மாதா கரகந்தனை எழுவக்கரியான் வகையாகத் தானெடுத்து வாழையிலை மேலே வைத்தான் மன்னர்கள் பார்த்திருக்க தங்காள் கரகம் தனிக்கரகம் செப்பனிட்டு வலதுபுறம் வைத்தான் எழுவக்கரியான் மன்னவனும் அப்போது அண்ணர் இருவரையும் அத்தைபிள்ளை மூவரையும் தங்கைக்கு வலது புறம் தயவாக உண்டு பண்ணி ஐவருக்கும் வலது புறம் அடைவாகத் தானிருத்தி தவச நிலைகாக்க வந்த தந்தன் தனிக்கருப்பன் வீரமகா முனியும் முன்னடிக் கருப்பண்ணனும் மாதா கொலுவிருக்கும் வலுது புறம் தானிருத்தி மண்டபத்துக்காப்பாலே வகையாகத் திண்ணையிட்டு கடிங்காலுச் சாம்புவனைக் கடக்கவே உண்டு பண்ணி பச்சிலையும் பாக்கும் பாங்குடனே முன்னே வைத்து தேங்காய் பழமும் திறமுடனே உடைத்து வைத்து செங்கரும்பு ரஸ்தாளி சீராய் நறுக்கி வைத்து செவ்விளநீர் ஆயிரமும் சீவி நறுக்கி வைத்து திறமாகத் தானும் திட்டமுடன் முன்னே வைத்து கைகாலும் சுத்தி செய்து கைகட்டி நின்று கொண்டு கம்பைய நாய்க்கனும் கை முசஞ்சு தெண்டனிட்டு ஏறிட்டுப் பார்த்து ஏது சொல்வார் கம்பையனும் அஞ்சாதே எழுவக்கரியான் அம்பலக்காரா இப்போது மாதாவைத் தானும் மனதில் நினைத்து மிக தூபதீபம் எடுத்து திறமாய் பெரியக்காளுக்கு கொடுமடா தீபமென்று நாயக்கர் குணமுடனே தானுரைக்க நல்லதென்று எழுவக்கரியான் நாடிமிக நடந்து மண்டபத்துக்குள்ளாக எழுவக்கரியான் மன்னவனும் தானும் வந்து பெரியமலை மாதாவைப் போற்றி அடிவணங்கி | | |
|
|