இடது கையில் மணியெடுத்து வலது கையில் தீபமது எடுத்து வெளியில் வந்தான் எல்லவரும் தான் சூழ வீரமலைத்திசை நோக்கி விரும்பி அவன் பார்த்து ஒடுங்கி வணங்கி ஒடுக்கமுடன் நின்றுகொண்டு தீபதூபம் புகை கொடுக்க தீரன் அவன்மேலே அந்த நல்லவேளையிலே அக்காண்டி மாதாவும் மாயமாய் அவன் பேரில் மாதாவும் வந்திடவே கண்கள் பொறி பறக்க கடகடவென்று நீரோட மருளுமுகங்கொண்டுமங்கே மண்டபத்தில் தான் புகுந்து முன்னே ஒரு நாள் முகம் பழகிக்கொண்டாப்போல் தீபதூபம் தான்கொடுத்தான் தேவி பெரியக்காளுக்கு தங்காள் பிறவியர்க்கு தான் வணங்கியே கொடுத்து அண்ணரிருவருக்கும் அத்தை பிள்ளை மூவருக்கும் வீரமகாமுனிக்கும் வெற்றியுடன் தான்கொடுத்து தனிக்கருப் பண்ணனுக்கும் தான் வணங்கியே கொடுத்து வெளியிலே வந்து நின்று எழுவக்கரியான் விதமாக அப்போது கடிகங்காளைச்சாம்புவனைக் கருத்தில் மிக நினைத்து கடக்க நின்று தூபம் கட்டினான் அப்போது ஆலாத்தி தீபம் அனைவருக்கும் தான் கொடுத்து ஏந்தியே எல்லோர்க்கும் இதமுடனே தான் கொடுத்தான் திருநீறு தான் கொடுத்தான் திரண்டசபை அத்தனைக்கும் அந்த நல்ல வேளையிலே எழுவக்கரியான் அதட்டிக்குலவையிட்டு ஆக்கரித்துப் பல்கடித்து அதட்டி அவன் அப்போது கரகத்தின் முன்னாலே கட்டழகன் மண்டியிட்டு திருமுடிமேல் தூக்கிவைத்து தீர்க்கமுடன் நின்று கொண்டு திருநீறு கையிலெடுத்து திருக்கரம் மேல் போட்டு வீரப்பூர் தானோக்கி மாதாவை விரும்பியவன் நடந்து தங்காள் கரகம் தனிக்கரகம் பின்னே வர | | |
|
|