பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை517

மாதா கரகம் வகையாக உள்ளே வைத்து
தெய்வ நிலையுண்டு பண்ணி சேரயிலை போட்டு
பொங்கல் நைவேத்தியம் போதவே தானும் வைத்து
தேங்காய் பழமும்திறமாக முன்னே வைத்து
தீபதூபம் தான்கொடுத்து தேவி பெரியக்காளுக்கு

மாதாவும் தங்கையரும் மற்றுமள்ள தேவதைக்கும்
கொடுத்தானே தீபதூபம் குணமுடனே அப்போது
அண்ணமாரிருவருக்கும் அவர் மைத்துனர் மூவருக்கும்
வீரமகா முனிக்கும் முன்னடிக் கருப்பனுக்கும்
கடிங்காலுச் சாம்பானுக்கும் கனமாகவே கொடுத்து

கற்பூர தீபாராதனை கடுகியே தான் கொடுத்து
எல்லவர்க்கும் தானும் ஏந்தி மிகக் கொடுத்து
தீபதூபம் கொடுக்கையிலே கோடையிடி குமாரசங்கு
ஆவேசம் வந்து அதட்டி அவர் பாய்ந்து
பார்க்க வந்த பேர் மேலே பற்கடித்து குலவையிட்டு

அண்ணரிவருந்தான் அதிர்ந்து விளையாடையிலே
வீரமகாமுனியும் முன்னடிக்கருப்பண்ணனும்
எல்லாரும் வந்து இதமாய் விளையாடி
கம்பைய நாய்க்கரை கதறி அவர் பார்த்து
நான் பட்டதொரு நாள் முதலாய் பாராமல் நீயிருந்து

நான் இறந்ததொரு நாள் முதலாய் ஏறிட்டுப்பார்க்கவில்லை
பல் கடித்து தம்பி சங்கர் பார்வையிட்டுத் தான் பார்த்து
கம்பைய நாய்க்கரும் கனத்த பிரதானிகளும்
கைகால் நடுங்கி கடகடவென்று தானுதறி
கைகட்டி முன்னே நின்று காத்திருக்கும் வேளையிலே

மாதா கரகத்தை எழுவக்கரியான் வகையாகக் கையிலெடுத்து
திருமுடி மேலே வைத்து தீரனவன் தானாடி
விபூதிதனை எடுத்து விட்டெறிந்து மாதாவும்
விளையாடி பந்தெறிந்து வேண்டியவள் பூப்பறிந்து