பக்கம் எண் :

518அண்ணன்மார் சுவாமி கதை

பூப்பறித்து மாதாவும் பொற்கரகம் கையிலேந்தி
பூப்பந்தலுக்குள்ளே வைத்தாள் எழுவக்கரியான் புகழாக அப்போது
எல்லோருக்கும் விபூதி எடுத்துமங்கு கை கொடுத்தான்
சந்தோஷமாகி தங்கள் மனை போனார்கள்
அந்த நாள் சென்று மற்றா நாளப்போது

ஊருச்சனங்கள் உத்தமர்கள் எல்லோரும்
வீட்டுக்கொரு பொங்கல் உகந்ததொருதுள்ளு குட்டி
எல்லோரும் கொண்டு வந்து ஏற்கையுடன் அண்ணனுக்கு
கோவிலுக்கு முன்பாகக்கொண்டு வந்து வைத்தார்கள்
அரண்மனைப் பொங்கலென்று ஆயிரம் பானை பொங்கல்

ஆயிரம் துள்ளு குட்டி அந்தச்சனம் கொண்டு வந்து
வெட்டி வைத்துக் கம்பையனும் வேடிக்கையாக நின்று
பள்ளயமும் போட்டு பாங்காய் அடசல் என்று
ஏகமாய்த் தான் குவித்து இருக்கும் தறுவாயில்
தூபதீபம் தான் கொடுத்தான் தோகைமலைக் கன்னியர்க்கு

வைகைமலை மாதாவும் வகையாய் மனமகிழ்ந்து
ஆனந்தமாக அவள் பேரில் தான் பாய்ந்து
வெண்முடியை விட்டுமந்த வீரமலை தன்னருகில்
இருந்து விளையாடி எல்லோரும் வீற்றிருக்க
கும்மி அடித்துமப்போ கூட விளையாடி

பூப்பறித்து மாதாவும், பொற்கொடியாள் நிற்கையிலே
பொறுமை பொறுத்த பொன்னம்பல சுவாமி
நெல்லி வளநாட்டான் நெற்சூழ்ந்த கோனாட்டான்
காராளர் பொன்னருமே கடகடவென்று அப்போது
அப்போது எழுவக்கரியான் மேல் பாய்ந்து பொன்னர் இதமாய் விளையாடி
வீரியனும் அப்போ விதமாய்க் குலவையிட்டு
பந்தலை விட்டு பொன்னர் பாங்காய் வெளியில் வந்து