பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை519

சாரியது பாய்ந்து பொன்னம்பல சுவாமி விளையாடி
தங்கி நின்று பொன்னர் சனங்களை தான் பார்த்து
பற்கடித்து தம்பி சங்கர் அண்ணரைப் பார்வையிட்டு தான்பார்த்து
கோபித்துக் கண் சிவந்து குலவையிட்டுத் தான் பார்த்து
ஆணழகன் தம்பி சங்கர் அங்கமெல்லாந் தானொடுங்கி

மேநாடு பார்த்து மீண்டுமவர் பற்கடித்து
அண்ணருந் தம்பியரும் அதிர்ந்து விளையாடி
சிலம்பம் பொருதி நின்றார் சீர் வேந்தர் காராளர்
அதட்டி அவர் தம்பி சங்கர் ஆக்கரித்து நிற்கையிலே
பார்க்க வந்த ஜனங்களெல்லாம் பாங்காய்த் தலைவிரித்து

வீரமகா முனியும் வெண்முடிக் கருப்பண்ணனும்
எல்லோரும் சன்னத்தமாய் இதமாய் விளையாடையிலே
தாட்டிமையாய் தம்பி சங்கர் சகலோரும் தானறிய
வாழை மரம் வெட்டி விட்டு வாய்த்ததொரு தம்பி சங்கர்
கம்பைய நாய்க்கர் கண்ணாலே பார்த்திருக்க

மேலெல்லாம் தான் நடுங்க விழுந்து விட்டார் பாடாக
தம்பி விழுந்திடவே சதுரமுடி பொன்னாண்டர்
மெய்மறந்து விட்டார் வேப்பங்குழை மேல் போட்டார்
கௌசனையைத் தான் போர்த்து கண்ணீர்தனைச் சொரிய
தம்பி தலைமாட்டில் தார்வேந்தர் வீற்றிருந்தார்

அண்ணன்மார் வீற்றிருக்க அம்பலக்காரன் தேவியின் மேல்
அண்ணருடன் பிறந்த அருக்காணி நல்லதங்கை
தலைவிரித்தே தான் புலம்பி தங்கையுமே வந்திடவே
வந்துமங்கே தங்கையரும் அண்ணரை வகையாகச் சுத்திவந்து
ஒற்றைக் கரகம் தங்கை ஒரு கையிலே தானெடுத்து

வேப்பங்குழை பிடித்து வீசி விளையாடி
கரகத்து நீர் தெளித்து கையில் குழை வீசி நிற்க