மூன்றே முக்கால் நாழிகை மெய்குழலாள்         தான் புலம்ப         களையாற்றி நிற்கையிலே தம்பி சங்கர் கால்விரலைத் தானாட்ட         உள்ளம் பதறியங்கே தம்பி சங்கர் உடம்பு கடகடவென்று         உருண்டு புரண்டு சங்கர் உருட்டி மிக விழித்து         பல்கடித்து தம்பி சங்கர் பார்க்குமந்த வேளையிலே                  பொன்னம்பல சுவாமி போதக்குலவையிட்டு         மார்போட தானணைத்து தம்பி சங்கு மயக்கமது தீர         பானக்கம் தான் கொடுத்து பண்பாயிளைப்பாற்றி         தேக்கந்தெளிந்து திரள் வீரன் தம்பி சங்கர்         கம்பைய நாய்க்கரைக் கடைக்கண்ணால் தான் பார்த்து                  மிரண்டு எழுந்திருந்து மேனாடுதிசை தானோக்கி         அண்ணர் முகம் பார்த்து ஆக்கரித்து மண்டியிட்டு         இருவரும் அப்போது எதிர்த்து விளையாடி         படுகளம் காத்திருந்த பாரமுடி அண்ணருக்கு         திருஷ்டிக் குட்டி காவல் சீக்கிரமாய்த் தான் கொடுத்து                  தீர்த்தம் மிக ஆடி திருநீறு தான் அணிந்து         மாதாவைப் பார்த்து மண்டியிட்டுக் கொக்கரித்து         கம்பைய நாய்க்கரைக் கண்ணாலேதான் பார்த்து         வலது கையைத் தான் பிடித்து வகையாக மண்டியிட்டு         ஏறிட்டுப் பார்த்தாரே எதிரில் நின்று நாய்க்கரைத்தான்   |       
                       கம்பையனுக்கு புத்திர வரம் கொடுத்தல்   |       
              அடா புத்திரனும் இல்லாமல் போத மனஞ்சலித்து         பட்டமதனை ஆள பாலன் இல்லையென்று சொல்லி         மெத்தச் சலித்து நீ மேனியெல்லாம் புண்ணாகி         நிற்கிறாயிப்போது நினைவு வேறாகவுந்தான்         மெத்த மனமகிழ்ந்து நாய்க்கர் விரும்பி அவர் தொழுது |