சின்னண்ணர் வாள்வீரர் சிறுபுலி குமாரசங்கு         மடிபிடித்துத் தானெழுந்து மண்டியிட்டுத் தான் பார்த்து         வீரமலை வெண்முடியில் விரும்பியே காத்திருந்தோம்         வீற்றிருந்து மாதாவை விரும்பியே கூட்டி வந்தோம்         உன்னருகில் பூஜை உகந்துடனே தான் வாங்கி                  வந்தேன் நான் உன்னிடத்தில் வையகங்கள் தானறிய         இப்போ பூஜை மிகக்கொடுத்தாய் எங்கள் பொந்தி பசிதீர         காவல் மிகக்கொடுத்து காத்து நின்ற மன்னனுக்கு         எங்கள் மாதா அறிய மைந்தன் தந்தேன் உந்தனுக்கு         அஞ்சாதே கம்பையனே அரசுதனை ஆள்வதற்கு                  புத்திர சந்தானம் போதமிகக் கொடுத்தேன்         என்று சொல்லி தம்பி சங்கர் எல்லோரும் தானறிய         புத்திர சந்தான வரம் போதமிகக் கொடுத்தார்         எல்லோருமறிய இதமாகக் கைபோட்டு         உன் தேசமெல்லாம் உகந்தெனக்கு பூஜைசெய்ய                  பண்ணிவைத்துக் கொடுத்தாயானால் பாலனுண்டு உந்தனுக்கு         எதுக்கும் நீ அஞ்சாதே என்று சொல்லி காராளர்         சன்னத்தங்கள் நின்று தயவாக எல்லோரும்         பூஜை முடிந்து புகழ பெரிய நாய்க்கருமே         அரண்மனைக்குப் போய் அன்பாக வீற்றிருந்தார்                  இப்படிக்குத்தானும் இருக்குமந்த நாளையிலே         நாய்க்கரும் பிரதானிகளும் நலமாக வீற்றிருந்தார்         காராளர் பொன்னர் சங்கர் காரணமாய்ப்பட்டவர் தான்         அன்றொருநாள் பூஜையிலே ஆனபலன் தந்தாரென்று         நம்முடைய சீமையெல்லாம் அவருக்கும் நலமான பூசை செய்தான்                  பட்டந்தனை ஆள்வதற்கு பாலன் வரந்தாரோ மென்றார்         ஆகையினாலிப்போது நாம் ஆண்டதொரு சீமையெல்லாம் |                             |           |   
				 | 
				 
			 
			 |