நாளை திங்கள் கிழமையிலே தீரனுக்குப் பூசையிட பண்ணிவைத்துத் தன் பதியை பாங்காக இப்போது நம்ம சீமையிலுள்ள சிறந்தகுடி அத்தனையும் வரவழையுமென்று வாக்காக சொல்லிடவே நல்லதென்று பிரதானி நலமாக ஓலைவிட்டார் ஓலைதனைப்பார்த்து ஊரிலுள்ள நாட்டார்கள் வீரப்பூர் வந்து வேந்தன் துரை கம்பையனை கண்டு மிகத்தொழுது கருத்துடனே நிற்கையிலே கம்பைய நாய்க்கர் கருத்துடனே தான்பார்த்து சந்தோஷமாக தயவாக ஏது சொல்வார் வாருங்கள் நாட்டாரே வார்த்தை சொல்லக் கேளுமென்று காராளர் பொன்னர் சங்கர் காரணமாய்ப்பட்டவகை நம்ம ஊருக்கு ஊரு உகந்து படைகள் வென்று நாய்க்கர் உரைக்க நல்ல குடி மன்னவரும் நாய்க்கரைத்தான் தொழுது நலமாக ஏது சொல்வார் எந்த விதமாக நாம் படைப்போம் ராஜாவே அப்போது நாய்க்கர் அவர்களைத் தான் பார்த்து உங்கள் மனை சுத்தி பண்ணி உத்தமரே நீராடி உங்கள் மனை தனிலே உயர்ந்ததொரு திண்ணையிட்டு பந்தலது போட்டு பாங்காய் அலங்கரித்து வாழைகமுகு வகுப்பாகக் கட்டிவைத்து பச்சிலையும் தோரணமும் பாங்காகக் கட்டிவைத்து திங்கள்கிழமை சிவகெங்கை நீராடி ஏழுடுக்குத் திருக்கரம் இதமாக முன்னே வைத்து மாதா கரகம் வலது புறம் முன்னே வைத்து பட்டதொரு காராளர் படை முகத்து வன்னியரை வலதுபுறமாக வைத்து இலை போட்டு மந்திர மகாமுனியை வலமாக முன்னே வைத்து தந்திரமான தனிக்கருப்பண்ணனை பின்னே வைத்து கட்டவர்க்கம் சோடனையாய் கனமாக முன்னே வைத்து | | |
|
|