பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை523

காராளர் இருவரையும் கைகொடுத்து வாங்களென்று
எல்லோருக்கும் புத்தி இதமாகத் தானுரைத்து
திங்கள்கிழமை நீங்கள் திறமாகச் செய்யுமென்று
உத்தரவு செய்து உடனே அனுப்பி வைத்தான்
நல்லதென்று ஊராரும் நலமாக ஊர் சேர்ந்தார்

ஊருக்கு ஊரு ஓடி முரசறைந்து
நாய்க்கர் சொல் தப்பாமல் நன்றாய் முரசறைந்தார்
ஊருக்குப் பிரத்தியேகமாய் உத்தமர்கள் பந்தலிட்டு
பந்தல் விளக்கி பாவாடை தானுங்கட்டி
பச்சிலையும் தோரணமும் பாங்காகத்தான் துலங்க

கட்டியலங்கரித்து காராளரைத்தான் நினைத்து
கங்கை தலைமுழுகி கீர்த்தியுடனப்போது
நீராடிப் பட்டுடுத்தி நெற்றியிலே நீறணிந்து
மாதா திருக்கரகம் வகையுடனே முன்னே வைத்து
ஏந்திய திருக்கரகம் இதமுடனே முன்னே வைத்து

பூவால் அலங்கரித்து பொற்கொடியாள் திருகரகம்
மருவும் மரிக்கொழுந்தும் வாய்த்த முல்லை மல்லிகையும்
கனமாகச் சூடி கரகத்தை முன்னே வைத்து
வலதுபுறமாக வாளாணி சங்கருக்கு
வீரமகாமுனியை விரும்பியங்கே தானும் வைத்து
தங்கை கரகம் தனிக்கரகம் தானும் வைத்து
தேங்காய் பழமும் திறவாக முன்னே வைத்து
செங்கரும்பு ரஸ்தாளி சீவி நறுக்கி வைத்து
செவ்விளநீர் கண் திறந்து திறமாக முன்னே வைத்து
பூம்பாளை கொண்டுவந்து பொற்கரகம் தன்னில் வைத்து

சாம்பிராணித் தூபம் கம கமவெனத்தான் போட்டு
வீரமலையை வெண்முடியைத் தானோக்கி
தீபதூபம் தான் கொடுத்து தேவியவள் மாதாவுக்கு
அதட்டிக் குலவையிட்டு மாதா ஆதேசமாய்ப் பாய்ந்து
சித்தன் மகளும் தேவி மனங்குளிர்ந்து