பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை7

அறிமுகம்

ஏட்டுப் பிரதியும்
எழுதிய விரல்களும்

சக்திக்கனல்

இது ஒரு நாடோடி இலக்கியம்.

  ‘குன்றுடையான் கதை’ என்று அழைக்கப்படும் இக்கதை கர்ண பரம்பரையாக
வருவது. பாடகன் உடுக்கையடித்துக் கொண்டு இதைப் பாடுவதும், இதைக் கேட்டு மக்கள்
நெஞ்சுருகி நிற்பதும் இந்த இலக்கியத்தின் மீது கொங்கு நாட்டு மக்களுக்குள்ள
ஈடுபாட்டைக் காட்டுவதுடன் கொங்குநாட்டு மண்ணில் இன்றும் வழக்கமாக இருந்து
வருகின்றது. கொங்கு நாட்டு வேளாளர் பண்பாடு, அவர்கள் வெள்ளை உள்ளம்,
உண்மைக்காக உயிர் கொடுக்கும் பண்பு - இவை கதை முழுவதும் பின்னிப் பிணைந்து
கிடக்கின்றன.

  கபடு, சூடு அறியாதவர்களை ‘மசைக் குன்றுடையான்’, ‘வெள்ளைச் சோளம்’,
‘அப்பாவி’ என்னும் சொற்களால் கொங்குநாட்டு மக்கள் குறிப்பிடுவதைக் கேட்கலாம்.
குன்றுடையான், தாமரை இருவரும் ஆரம்ப காலந்தொட்டு பட்ட இன்னல்கள்
ஒன்றிரண்டல்ல. பங்காளிகள் அவர்களுக்குச் செய்த கொடுமைகள் நெஞ்சு பதறும்படி
இருக்கின்றன. ஆம்; கொங்கு நாட்டில் வேளாளர் இனத்தில் ‘பங்காளிக் காய்ச்சல்’
என்பது ஒரு பரம்பரைச் சொத்தாக இன்றும் இருந்தும் வருவது கண்கூடு.
இவர்களிடையே