பக்கம் எண் :

மதுரை வீரன் கதை145

  
ஓட்டமா ஓடிவந்து

1855

     உத்தமனைத் தான் பார்த்து
“அப்பா மகனே” என்று
     அலறி தான் அழுது
“வெள்ளையரை189 வேணும் என்று
     விரும்பி எனைக் கேட்டால்
கோதை மயிலைக்
     கூட்டி வந்து தாரேனோ
எந்தனது பெண்ணை
     இஷ்டமுடன் கேட்டாலும்
கல்யாணம் தான் முடித்து

1860

     கண்ணாலே பாரேனோ
நான் தான்டா வீரர் என்று
     நலமுடனே சொல்லாமல்
பேசாமல் இருந்ததினால்
     பிழை மோசம் வந்தது காண்!”
 
மன்னன் வழிபாடு
 
என்று சொல்லிய நாய்க்கர்
     ஏங்கி முகம் வாடி
மீனாக்ஷி சந்நிதிக்கு
     விருப்பமுடன் சென்றேகி
உத்தரவு கேட்டு

1865

     ஒரு நொடியில் நான் வருவேன்
என்று சொல்லியபோது
     இசைவுடனே போனார்கள்
சொக்கர் திரு ஆலயத்தில்
     துருசாகப் போய் புகுந்து
முக்கால் வலம் வந்து
     மூவிருகால் தெண்டன் இட்டான்
“திரிபுரம் எரித்தவர்கள் தன்
     தேவி பரமேஸ்வரியே
ம-க-10